27 January 2010

தெளிவான முடிவு 30

சேகர் சொன்னதற்கு எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்தாள்.அவளுக்கு எந்த கிளாசும் இல்லாததால் தன் அறையில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள் .இதற்கு மேலும் நம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தாமதிக்க கூடாது என்று நினைத்தாள். நல்ல தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றால் ,ஒப்பிட்டு பார்ப்பது தவறில்லை என்று தோன்றியது,ஸ்வேதாவுக்கு ......இருவரிடமும் நெருக்கமாக பழக நேரா விட்டாலும் ,பழகிய தருணங்களில் இருந்து பதில் தேட முயற்சித்தாள்.

சுனில் மற்றும் சேகர் இருவருமே பழகுவதில் நல்லவர்கள். சேகர் அவனுக்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே சகஜமாக பேசுவான். சென்டரில் கூட எல்லோரிடமும் அவன் பேசுவதில்லை ,தேவை என்றால் பேசுவது அவனின் இயல்பு. அதே போல்,அந்த interview selection இல் சொன்ன விதம் ஸ்வேதாவை யோசிக்க வைத்தது ,தன்னை விட அதிகம் தெரிந்தவரை சேகருக்கு பிடிக்காது ,அதனால் தான் அவன் ரகுவை செலக்ட் செய்தான்.
ஆனால் சுனில் தெரிந்தவர் தெரியாதவர் , யாரிடமும் சகஜமாக பேசி பழகி விடுவான்.அம்மாவை ஹாஸ்பிடலில் வந்து பார்த்து பழகிய விதமும் , அக்கா மாமாவிடம் அணுகிய முறையும் முன் தினம் தான் அறிமுகமே என்றாலும்,தன் வீட்டு விசேஷத்திற்கு அழைத்த விதமும் ஸ்வேதாவுக்கு பிடித்திருந்தது......

சுனிலின் குடும்பம் சின்ன குடும்பம் ,ஒரே பையன் .அதனால் அவ்வளவு பொறுப்புகள் இல்லை.தானுண்டு குடும்பமுண்டு என்று இருக்கலாம் .
ஆனால் சேகரின் குடும்பமோ சற்று பெரியது,இரண்டு தம்பிகள் ...இருவரும் சேகரை நம்பி இருக்கிறார்கள் . பொறுப்புகள் அதிகம் . எனவே சுனிலின் குடும்பம் தான் தனக்கு சிறந்தது என்று ஸ்வேதா எண்ணினாள் .

சுனில் ,ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல உத்தியோகத்தில் உள்ளார்.கை நிறைய சம்பளம் .ஆனால் சேகரோ ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இல் faculty , சம்பளம் ஒன்றும் பெரிதாக இல்லை . சேகரை விட சுனில் தான் மிகவும் அழகு. இந்த வகையிலும் ஸ்வேதாவுக்கு சுனிலை தான் பிடித்தது.

இவ்வாறு பல வகையிலும் சுனில் தான் ,தனக்கு பொருத்தமானவன் என்று நினைத்தாள் .குணம் ,பணம் ,அந்தஸ்து ,குடும்பம் ,அழகு என்று அனைத்திலும் நம் வாழ்க்கைக்கு நல்ல துணை சுனில் தான் என்று தெளிவான முடிவை எடுத்தாள். தன் முடிவு சுயநலமோ என்று கூட எண்ணினாள் .சுயநலம் தான் , ஏனென்றால் இது அவளின் வாழ்க்கை .

பின்குறிப்பு: ஸ்வேதாவின் முடிவு தெரிந்த பின்னர் ,சேகர் வேலை விட்டு செல்வது என்று முடிவெடுத்தான். அதே சென்டரில் வேலை பார்த்தால் ,ஸ்வேதாவை பார்க்க நேரிடும் ,மனது சஞ்சலப்படும் என்று நினைத்த அவன் வேறு இடத்தில் வேலைக்கு முயற்சித்தான் .இது தான் அவனுக்கு தெளிவான முடிவாக பட்டது.
ஸ்வேதாவுக்கும் சுனிலுக்கும் இனிதே திருமணம் நடந்தது.
__________________முற்றும் _________________

26 January 2010

தெளிவான முடிவு 29

ஸ்வேதா சுனிலிடம் ஐந்து மணி போல் வர சொன்னாள்.சென்டர் க்கு சென்ற அவள், தன் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்.அப்போது ப்யூன் ராமு வந்து ,அவளை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக சொல்ல ,யார் நம்மை பார்க்க வந்துள்ளார் என்ற ஆர்வத்தில் பார்க்க அவளுக்கு ஒரு அதிர்ச்சி,அங்கு வந்திருந்தது அவளின் இன்னொரு தோழி விஜி .ஸ்வேதா ,"விஜி எப்படி இருக்க ?.. நீ சென்னைலையா இருக்க ?நான் இங்க இருப்பது உனக்கு எப்படி தெரியும் ?என்ன விஷயம் ? என்று கேட்டாள்.

விஜி கண்ணீர் மல்க ," ஸ்வேதா நான் என்ன சொல்றது ,என் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறி ஆயிடுச்சி ? நீ சென்னை போன பிறகு, எனக்கும் சென்னை வர வேண்டும் ,வேலையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் வர ,பெற்றோரிடம் சொல்லி விட்டு சென்னை வந்தேன்..பல இடங்களில் வேலை தேடியும் நல்ல வேலை கிடைக்கவில்லை.உன்னை பார்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால் நானும் ஒரு வேலையில் அமர்ந்த பின் தான் உன்னை பார்க்கவேண்டும் என்ற பிடிவாதம் எனக்குள்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான் எனக்கு ஒரு கம்பனில் வேலை கிடைத்தது அங்கு வேலை பார்த்த ரமேஷ் என்னை காதலிகிறேன் என்று சொல்ல நானும் அவரை காதலிக்க ,என் பெற்றோரை மீறி அவரை திருமணம் செய்து கொண்டேன் .ஒரு மாதம் சந்தோசமாக தான் போனது , ஆனால் இன்று அந்த கம்பெனி எ மூடிட்டாங்க .எங்க இருவருக்கும் வேலை இல்ல ....என் அம்மா அப்பா கிட்ட கேட்டா நீயா கல்யாணம் செஞ்சுகிட்ட ,நாங்க உனக்கு உதவ முடியாதுன்னு சொல்லிட்டாங்க ....ரமேஷின் குடும்பமும் சொல்லி கொள்ளும் படி வசதி இல்ல,இவருடைய சம்பளம் வச்சி தான் அங்க குடும்பம் ஓடுது ....இப்போ பாரு என்னோட நிலைமை , அடுத்து எதாவது வேலை சென்றால் தான் எங்க குடும்பத்தையே ஓட்ட முடியும் .....அப்போ தான் உன்னோட நினைவு வர , உன் அக்காகிட்ட போன் செய்து இந்த அட்ரஸ்ஸை வாங்கினேன்.நீ தான் யாரிடமாவது சொல்லி வேலை வங்கி தரணும் ,எனக்கோ இல்லை என்னோட கணவருக்கோ ...." என்று குமுறலுடன் முடித்தாள்.

ஸ்வேதா,"கட்டாயம் நான் எங்க ஹெட் கிட்ட ,மாமா கிட்ட சொல்றேன் ..உன்னோட ரெசுமே என்கிட்டே கொடுத்திட்டு போ. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத " என்று ஆறுதல் சொல்லி அவளுடைய போன் நம்பரை வாங்கி கொண்டு அனுப்பினாள்.விஜியின் கதைய கேட்ட ஸ்வேதாவுக்கு மனமெல்லாம் பாரம் . விஜிக்கு இப்படி ஆகிவிட்டதே ? என்று உடனே கோபாலனிடம் சென்று அவளுக்காக உதவி கேட்டாள்.

மதியமே சேகர் வந்தான் , மிகவும் கவலையாக காணபட்டான். ஸ்வேதா ஆறுதல் கூறியபடியே சேகரின் குடும்பத்தை பற்றி கேட்க ஆரம்பித்தாள் .சேகர்," எனக்கு அம்மா இல்ல ,இரண்டு வருடம் முன்பு தான் அம்மா தவறிட்டாங்க ,அப்பா , இரண்டு தம்பிகள், இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள்.அப்பாவின் பென்ஷன் மற்றும் என்னுடைய சம்பளம் தான் இப்போ வருமானம் ,தம்பிகள் படித்து முடித்து வேலையில் அமர்ந்து விட்டால் எனது பாரம் குறையும் .என் குடும்பத்தை , தாய் போல இருந்து வழி நடத்த ஒரு நல்ல மருமகளை தான் என் அப்பாவும் தேடி கொண்டிருக்கிறார் ............" என்று சொன்னான். மறைமுகமாக தன் முடிவை எதிர்பார்க்கிறான் சேகர் என்பதை உணர்ந்தாள் ஸ்வேதா.

23 January 2010

தெளிவான முடிவு 28

சுதாவும் சென்று ஸ்வேதாவை கையில் காபி தட்டுடன் அழைத்து வந்தாள்.ஸ்வேதாவும் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அமர்ந்தாள். சுமதி ," நான் சுத்தி வலச்சு பேச விரும்பல ,நேரடியா விசயத்துக்கு வரேன் சுனிலுக்கு ஸ்வேதாவ பிடிச்சிருக்கு . ஸ்வேதாவுக்கும் சுனிலை பிடிச்சிருக்கும் ன்னு நினைக்கிறேன் . நான் எங்க ஜோசியர்ட்ட பேசிட்டு ஒரு நாள் சொல்றேன் ,அன்னைக்கு நாம தாம்பூலம் மாத்திக்கலாம் ...அன்றே கல்யாண நாளையும் குறிச்சிடலாம் ." என்று சொன்னாள் .

சரஸ்வதி ,"நீங்க எல்லாம் சொன்னீங்க ,எவ்வளவு நகை போடணும் ....கையில் பணம் எவ்வளவு எதிர்பார்கிறீங்க ன்னு சொன்னா நல்லா இருக்கும்" என்று கேட்க ," நீங்க உங்க பொண்ணுக்கு என்ன செய்யணும்னு விருப்பபடுரீன்களோ அதையே செய்யுங்க ....எங்களுக்கு இருப்பது ஒரே மகன் .அதனால எங்களுக்கு எதுவும் வேணாம் .நாங்களே திருமண செலவு எல்லாம் பார்த்துக்குரோம்.திருமணத்திற்கு பிறகு எங்களையும் சுனிலையும் நன்றாக கவனித்தாலே போதும் ..."என்று சொன்னாள் சுமதி .சரஸ்வதிக்கு இதை கேட்டதும் எல்லையில்லாத ஆனந்தம் ...."ரொம்ப சந்தோசங்க நீங்க நல்ல நாளா ஜோசியர்ட்ட கேட்டுட்டு சொல்லுங்க ...நாம ஆக வேண்டியத பார்க்கலாம் "என்றார்.இப்படியே பேசி விட்டு ,சுனிலும் பெற்றோரும் கிளம்பினார்கள்.

சுனில் ,ஸ்வேதா ஏதோ மனசஞ்சலத்தில் உள்ளாள் என்பதை உணர்ந்தான்.அவர்கள் சென்றவுடன் ஸ்வேதா தன் அறைக்கு சென்றாள்.சரஸ்வதி ஸ்வேதாவை பின் தொடர்ந்து வந்தாள்."ஸ்வேதா உனக்கு சுனிலை பிடிச்சிருக்கா ? நீ ஏன் சோகமா இருக்க ,நான் உன்ன கவனிச்சிட்டு தான் இருந்தேன் ....சுனிலை பிடிக்கலன்னா சொல்லு ....நாம நிறுத்திடலாம் ,"என்று சரஸ்வதி சொல்ல ..."அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மா ....நான் சென்டர்ல இருந்து வந்தேன்ல அந்த அசதி தான்.எனக்கு ஏதாவதுன்னா கட்டாயம் உன் கிட்ட தான் சொல்லுவேன் மா நீ போய் தூங்கு "என்று சொல்ல ,அவளும் சென்றாள்.

ஸ்வேதாவுக்கு மறு நாள் காலை கைபேசி அழைக்க , எடுத்து பேசினாள். மறுமுனை சேகர் ,"ஸ்வேதா இன்னைக்கு நான் சென்டர் வர மாட்டேன் ,என் அப்பாவுக்கு உடம்பு சரி இல்ல ...ஆஸ்பித்திரி போகணும் ....நீங்க என் ஸ்டுடண்ட்ஸ் ஐ கொஞ்சம் பார்த்துகோங்க ப்ளீஸ் " என்றான் ஸ்வேதா ...சென்டர்க்கு கிளம்பி கொண்டிருக்க ..திரும்பவும் அவள் கைபேசி அழைக்க ...மறு முனையில் சுனில் ," ஹாய் ஸ்வேதா குட் மார்னிங் ,உங்க கிட்ட கொஞ்ச நேரம் நல்லா பேசணும்னு நானும் ட்ரை பண்றேன் ஆனா முடியல....இன்னைக்கு நீங்க எப்போ ப்ரீ யா இருப்பீங்கன்னு சொல்லுங்க ,நாம மீட் பண்ணலாம் " என்றான்.

22 January 2010

உதவி

சுமன் ,கல்லூரி நாட்களில் உதவி என்று கேட்டு வரும் நண்பர்களுக்கு தன்னால் இயன்ற வரை உதவி செய்வான்.உதவி என்பது அவனிடம் இருந்து பணத்தை கடனாக பெறுவது தான்.கடன் என்று தான் கேட்பார்கள்.....ஆனால் அது காந்தி கணக்கு தான். திருப்பி கொடுத்தவர்கள் சிலரே, கொடுக்காதவர்கள் பலர் . ட்ரீட் கொடு ,பார்ட்டி வை என்று அவனிடம் கொஞ்சம் பணம் இருந்தாலும் அனைத்தையும் பிடுங்கி செலவுசெய்யும் நண்பர்களே அவனுக்கு அதிகம் . சுமனை ஏமாளி என்றும் சொல்லுவார்கள்,நல்லவன் என்றும் சொல்லுவார்கள்.ஏழ்மை என்றால் என்ன என்றே அறியாதவன்.அவனின் அப்பா ஒரு வைர வியாபாரி.ஆனால் இன்று சுமனின் நிலைமை ??

அப்பா இறந்து விட ,அப்பாவின் சகோதரர்கள் அவனை ஏமாற்றி எல்லா சொத்தையும் பெற்று கொண்டார்கள்.அவர்களுக்கு சொத்து என்று இருப்பது குடியிருக்கும் வீடு மட்டுமே ,அதுவும் அம்மாவின் பெயரில் இருப்பதால் தான் சுமனின் உறவினர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை? பிசினஸ் க்கு உதவுமே என்று B.Com படித்தான் .பட்டம் பெற்றான்.படித்து முடித்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன , அப்பாவுக்கு உதவுகிறேன் பிசினஸ் ஐ வளர்க்க போகிறேன் என்று சொல்லி நாட்களை வீணடித்து விட்ட சுமன் , இன்று
அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் ??

வேலைக்கு செல்வது என்று முடிவெடுத்தான்.தன்னால் முடிந்த வரை பல கம்பெனிகளுக்கு அப்ளை செய்தான்.எங்கிருந்தும் அவனுக்கு ஒரு பதிலும் வரவில்லை. பல இடங்களுக்கு அலைந்து வேலை தேடி பார்த்தான் ,ஒன்றும் பிடிபடவில்லை.நண்பர்கள் பலர் இருந்தும் , அவர்களிடம் தன் நிலையை சொல்லி கேட்க அவனுக்கு பிடிக்கவில்லை . இப்படி தான் ஒரு நாள் ,ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வாக்-இன் இருந்தது, சென்றான் ,நன்றாக தான் செய்தான் .வெளியே அமருங்கள் என்று சொல்ல அவனும் முடிவுக்காக காத்திருந்தான் .செலக்ஷன் லிஸ்டில் அவனது பெயர் இன்ப அதிர்ச்சி !!!.

கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்பினான் ,அருகில் நின்றிருந்தது அவனின் தோழன் சரவணன். சரவணன் ஏழை மாணவன் ,சுமன் உதவியர்களில் இவனும் ஒருவன் . நெருங்கிய நண்பன் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவனும் நண்பன் தான் .சரவணன் , " சுமன் நான் உன்ன இங்க பார்த்ததுமே எனக்கு ஒரே ஆச்சர்யம்.டா ..உன்னை பின் தொடர்ந்து கவனித்தேன் ,உன்ன பத்தி நீ சொல்லும் போது தான் உன் குடும்ப சூழ்நிலைய கேட்டேன்,உன் நிலைமையை புரிஞ்சிகிட்டேன் .எங்க மானேஜர் ட்ட உன்ன பத்தி சொன்னேன் உனக்கு நான் referrence கொடுத்தேன். அன்னைக்கு நீ எனக்கு செமஸ்டர் பீஸ் கட்ட உதவின...அதனால தான் என்னால படிக்க முடிஞ்சிது..இந்த கம்பெனில நல்ல பொசிஷன் வர முடிந்தது .நீ மட்டும் எனக்கு உதவலேனா நான் எங்கயோ விவசாயம் பண்ணிட்டு இருப்பேன் ,இன்று இந்த நிலையில் இருப்பது உன்னால் தாண்டா உனக்கு நன்றி சொல்லனும்னு நான் நெனச்சிட்டு இருந்தேன் , இன்னைக்கு கடவுள் உன்னை இங்கே பார்த்து உதவ வச்சிட்டார்.... தாங்க்ஸ் டா மச்சான் " என்று சொன்னான்.

சுமனுக்கு எல்லாம் கனவு போல் இருந்தது......."எப்போதோ நான் செய்த உதவி இன்று என்னை காப்பாற்றுகிறது " இந்த மகிழ்ச்சியான நிகழ்வை தன் அம்மாவிடம் சொல்ல புறப்பட்டான்.

தெளிவான முடிவு 27

அனைத்தையும் பார்த்த சேகர் ,அவர்களை நேர்முகத்தேர்வு செய்தான் .கோபாலன் அங்கு வர ,"நல்ல கேண்டிடேட்ஸ் ஐ தேர்ந்தெடுத்து விட்டீர்களா ?ஸ்வேதா நீங்களும் ,சேகரும் உள்ளே ரூம் க்கு வாங்க ,நாம ஒருத்தர செலக்ட் பண்ணிடலாம் " என்று சொன்னார்.சேகரும் ஸ்வேதாவும் உள்ளே சென்றார்கள்.சேகர் கோபாலனிடம் ,"இந்த பெர்சன் ரகு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு , He performed well in the interview,we can select him என்று ரகுவின் CV யை கொடுத்தான் .கோபாலனும் பார்த்து ,"ஒ.கே அவரை என்னிடம் அனுப்புங்க " என்று சொன்னார். கோபாலானும் ரகுவையே தேர்வு செய்தார்.

ஸ்வேதா , சேகர் கட்டாயம் அந்த சரண்யாவை தான் செலக்ட் செய்வார் என்று நினைத்தாள் , ஆனால் ரகுவை ஏன் செலக்ட் செய்தார்? சரண்யாவுடன் ஒப்பிட்டு பார்த்தாள் ரகுவுக்கு அவ்வளவு திறமை இல்லையே என்று நினைத்து கொண்டிருந்தாள்.. மதியம் swetha சேகரிடம் ,"ஏன் சார் நீங்க சரண்யாவா செலக்ட் செய்யல , நான் தான் நிறைய பாய்ண்ட்ஸ் கொடுத்திருந்தேனே "? என்று கேட்டாள் .சேகரும் ,"ஆமா ஸ்வேதா சரண்யா நல்லா பண்ணி இருந்தாங்க ...ஆனா நமக்கு அவுங்க தேவையில்ல ,நம்மை விட அதிகம் தெரிந்திருந்தா ,நாம சொல்றத கேட்க மாட்டாங்க , அவுங்க எல்லாம் தெரிஞ்சவங்க ன்னு ஆட்டம் போடுவாங்க ...நான் ஏன் ரகுவை செலக்ட் செஞ்சேன்னா அவனும் நம்ம லெவல் எ தான் இருக்கான்.நாம சொல்றத கேட்டு நடந்துக்குவான் .."என்றான் .இந்த பதிலை ஸ்வேதா கொஞ்சமும் சேகரிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை.

மூன்று மணி போல் சுதா ,ஸ்வேதாவுக்கு போன் செய்து "ஸ்வேதா நீ கிளம்பி வீட்டுக்கு வா,சுனில் வீட்ல இருந்து எல்லோரும் ஆறு மணிக்கு வந்திடுவாங்க ...நானே லீவ் போட்டுடேன் ,சீக்கிரம் வா " என்று சொன்னாள். ஸ்வேதாவும் ,கோபாலனிடம் சொல்லி விட்டு வீடு வந்தாள்.மனது குழப்பத்துடன் இருந்தாலும் ,காலம் பதில் சொல்லட்டும்,மண்டபம் வரை வந்த திருமணம் கூட சில சமயம் நின்று போவதுண்டு.என்ன நடந்தாலும் நாம் ஏற்று கொள்ளனும் என்று தன்னையே தயார் செய்து கொண்டாள்.
அனைவரும் எதிர் பார்த்தது போல ,சுனில் தன் பெற்றோருடன் வந்திருந்தான்.

சுனிலின் அம்மா அப்பா சோபாவில் அமர சுனில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.சரஸ்வதி அவர்களை பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசி கொடிருந்தார்.சுனில் கண்கள் ஸ்வேதா வை தேடி கொண்டிருந்தன.ஸ்வேதா பட்டு புடவை உடுத்தி,தலை நிறைய பூ வைத்து .அலங்காரம் செய்து தன் அறையுள் அமர்ந்திருந்தாள். சுரேஷும் சுனிலுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் . சுனிலின் அம்மா சுமதி ,"சரி நாம பேசிட்டே இருந்தா ஸ்வேதாவ வர சொல்லுங்க ,நாங்க தான் ஏற்கனவே ஸ்வேதாவ பாத்தாச்சு ,சும்மா நாம பேசும் போது ,அவ உள்ள இருந்து என்ன பண்ணுவா? ,வர சொல்லுங்க சீக்கிரம் என் மருமகள பார்க்கணும் ........." என்றார்.இதை கேட்ட சரஸ்வதிக்கு சந்தோசம் "நான் இப்பவே வர சொல்றேங்க ....சுதா நீ போய் ஸ்வேதாவ கூட்டிட்டு வா "என்றாள்

20 January 2010

தெளிவான முடிவு 26

மறு நாள் காலையும் வந்தது.சுரேஷ் சுனிலின் அம்மாவுக்குஅழைத்து பேசினான்,அவர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு வருவதாக கூறினார்கள்.
அதை எல்லோரிடமும் கூறினான்.சரஸ்வதி ,ஸ்வேதாவை லீவ் போட சொன்னாள்.இருந்தாலும் ஸ்வேதா சீக்கிரம் வந்து விடுவதாக சொல்லி புறபட்டாள். சென்டர் சென்றதும் சேகர் வாசலில் நின்றவனாய் ,"வாங்க ஸ்வேதா ,உங்களுக்காக தான் காத்திக்கிட்டு இருக்கேன் ....நீங்க எங்க வராம போயிடுவீங்களோ ன்னு நெனச்சேன் .....சரி உங்க அம்மா எப்படி இருக்காங்க ? டிஸ்சார்ஜ் ஆயிட்டாங்களா ?என்று கேட்க
ஸ்வேதா , "அம்மா வீட்டுக்கு வந்துட்டாங்க ,நல்லா இருக்காங்க ...என்ன விஷயம்?என்ன ஏன் எதிர்பார்த்தீங்க? "என்று சொன்னாள்.

சேகர்,"நாம இன்னைக்கு ஒரு faculty position க்கு இண்டர்வியு நடத்தனும்..இப்போ தான் கோபாலன் சார் சொன்னார் .சார் க்கு தெரிந்த பள்ளியில் இருந்து , பத்து மாணவர்கள் இங்க படிக்க வர்ற்ராங்களாம் , அவர்களுக்கு கிளாஸ் எடுக்க ஒரு ஆள் தேவபடுது , அதுக்காக நாம ஒரு staff செலக்ட் பண்ணனும் அதுக்கு தான் , இந்த இண்டர்வியு.நீங்க முதல் ரவுண்டு கண்டக்ட் பண்ணுங்க ,நான் ரெண்டாவது ரவுண்டு செலக்ட் பண்ணறேன் ,அதற்கப்புறம் கோபாலன் சார் பாத்துக்குவார். "என்று சொன்னான்.ஸ்வேதாவும் ,"சரி சார் நாம நல்லா பண்ணிடலாம் .எப்படி, எங்க நடத்த போறோம் ? எத்தன பேர் வர்றாங்க ?எப்போ எல்லோரும் வருவாங்க ?"என்று கேட்டாள்.

சேகர் எப்படி நடத்த வேண்டும்...எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி கொடுத்தான்," ஸ்வேதா 6 பேர் வருவாங்க. பத்து மணிக்கு தான் வருவாங்க நீங்க 3 பேர வடிகட்டி 3 பேர மட்டும் என்கிட்டே அனுப்புங்க ...நான் கொடுத்திருக்கும் இந்த சீட்ல உங்க நோட்ஸை எழுதுங்க அது எனக்கு ரொம்ப உதவியா இருக்கும் " என்றான் .ஸ்வேதாவும் அதற்கு சம்மதித்தாள். பத்து மணியும் ஆனது ,ஆறு பேரும் வந்து காத்திருந்தார்கள்.
அவளுக்கு தெரிந்த விதத்தில் கேள்விகள் கேட்டு மூன்று பேரை செலக்ட் செய்தாள். மூவரில் அவளுக்கு மிகவும் பிடித்தது சரண்யாவை தான்.அவள் சரளமாக பேசிய ஆங்கிலத்தையும், அவளுக்கு உள்ள கம்ப்யூட்டர் அறிவையும் கண்டு ஸ்வேதா ஆச்சரியபட்டாள் "இவள் நம்மை விட மிகவும் சிறந்தவளாக, திறமை உள்ளவளாக இருக்கிறாள் " என்று சொல்லி கொண்டாள். அவள் தேர்ந்தெடுத்த resumes ஐ சேகரிடம் கொடுத்தாள்.

19 January 2010

தெளிவான் முடிவு 25

சரஸ்வதி சுதாவிடம் ,"நீ வந்த போதே கேட்கனும்னு இருந்தேன் ,என் பேத்தி சுர்யாகுட்டி எங்க ? எப்படி இருக்கா என் பேத்தி ?" சுதா ,"நல்லா இருக்கா மா,அவளை என் பிரின்ட் வீட்ல விட்டுட்டு தான் வந்தேன் ,நாம போகும் போது அப்படியே கூட்டிகிட்டு போயிடலாம் " என்று சொன்னாள்.

சுரேஷும் சுனிலும் உள்ளே வந்தார்கள். சுனில் ,"சரி மா நான் கிளம்புரேன் , உடம்ப பாத்துகோங்க ,நாளைக்கு வீட்டில் வந்து பார்கிறேன்" , என்று சரஸ்வதியிடம் சொல்லிவிட்டு , ஸ்வேதா நான் வரேன் என்று சொல்லி கிளம்பினான். இவர்களும் ஹாஸ்பிடல் விட்டு கிளம்பி ,சூர்யாகுட்டியை அழைத்து , வீடு வந்து சேர்ந்தார்கள்.

சுரேஷ் ,"அத்த எப்படி எங்க selection ,சுனில உங்களுக்கு புடிச்சிருக்கா? " என்று கேட்க சரஸ்வதி ,"அந்த தம்பி என்னை முன்ன பின்ன தெரியாட்டாலும் ,ஆஸ்பத்திரி யில் வந்து பார்த்ததும் பேசிய விதமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ,இனிமே தள்ளி போட வேணாம் , சுனிலின் அம்மா அப்பாவ நம்ம வீட்டுக்கு வர சொல்லுங்க ,நாளைக்கே இத பத்தி பேசிடலாம்"
என்றாள்.தன் நிலைமையை கூட மறந்து சரஸ்வதி தன் மகளின் எதிர்காலத்தை பற்றி இவ்வாறு முடிவெடுக்க வைத்தது சுனிலின் நடவடிக்கை.

சுதா ,"ஆமா மா ,நீ சொல்றதும் சரி தான் .நாம சீக்கிரமே முடிவெடுக்கணும் . இவ்வளவு சீக்கிரம் ஸ்வேதாவுக்கு திருமணம் கூடி வரும் ன்னு நான் நினைக்கல,ஸ்வேதா அதிர்ஷ்டசாலி தான் ... முதல்ல வேலை கெடச்சது உடனே திருமணமும் அமைய போகுது " என்று ஆனந்தபட்டாள்.சுரேஷும் ,"சரி அத்த ,நான் சுனிலின் அம்மாவுக்கு நாளைக்கு போன் பண்ணி நல்லநேரம் பார்த்து வர சொல்லறேன் " என்றான் .

இவ்வாறு அனைவரும் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருக்க ,ஸ்வேதா மட்டும் தன் அறையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தாள். "சேகர் சொல்லியதால் தான் இவ்வளவு பிரச்சனை எனக்கு ...அவன் சொல்லாமல் இருந்தால் ,எவ்வளவு நல்லா இருக்கும் .... நாம சேகரிடம் என்ன சொல்லலாம் ? சுனிலையே திருமணம் செய்து கொள்ளலாமா ? அம்மாவிடம் இவ்வாறு நடந்ததை சொல்லி யோசனை கேட்கலாமா ? எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு " என்று தனக்குள்ளே பேசி நொந்து கொண்டாள்.

தெளிவான முடிவு 24

மாலை 6 மணி இருக்கும் ,சுதாவும் சுரேஷும் வந்தார்கள் .டாக்டரிடம் மூவரும் போய் பேசினார்கள்... இரவு 8 மணிக்கு சரஸ்வதியை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று டாக்டர் கூறினார் .இதை கேட்ட அனைவருக்கும் சந்தோசம் .சுரேஷ் ஹாஸ்பிடல் பில்லை கட்ட சென்றார் .சுதாவும் , ஸ்வேதாவும் சரஸ்வதியின் அருகில் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது கையில் பழங்களுடன் சுனில் வந்தான்.இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்வேதா ஆச்சர்யமாய் சுனிலை பார்த்தாள் .
சுதா ,"வாங்க சுனில்...உங்களுக்கு எப்படி தெரியும் ,நாங்க இங்க இருக்கோம் என்று ?ஸ்வேதா சொன்னாளா ?சுரேஷ் இப்போ வந்திடுவார் ..உட்காருங்க " என்றார் . சரஸ்வதி ,"யாரும்மா இந்த தம்பி?" என்று சுதாவை பார்த்து கேட்டார் . சுதா ,"இவர் தான் சுனில் மா ,நம்ம ஸ்வேதாவ இவருக்கு தான் பார்த்தோம்....நான் கூட போன்ல சொன்னேன்ல ,அவர் இவர் தான் ."என்று சொல்ல சுனில் சரஸ்வதியை பார்த்து வணங்கினான் .

"எப்படி இருக்கீங்க மா ,இப்போ பரவில்லையா ? ஸ்வேதா தான் சொன்னாங்க ,.அதான் அப்படியே உங்கள பார்த்து விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தேன் ....." என்று சுனில் சொல்ல சரஸ்வதி ,"ரொம்ப சந்தோசம் தம்பி, என்ன பார்க்க இவ்வளவு தூரம் வந்ததற்கு , நான் கொஞ்சம் பார்த்து இறங்கி இருந்தா இந்த அவஸ்தை எனக்கு இருக்காது ,வயசாயிடுச்சு என்ன பண்றது இதெல்லாம் சகஜம் தானே" என்று பேச ,சுனில் ,"நீங்க சொல்றது சரி தான் மா, உங்களுக்கு சீக்கிரமே குனமாகிடும் கவலை படாதீங்க .சுரேஷ் அறைக்குள் நுழைய ,"வாங்க சுனில் , ஏது இந்த பக்கம்? " என்று சொல்லி கை குலுக்கினான் .

சுனிலும் சுரேஷும் பேசி கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வெளியே சென்று பேசி கொண்டிருந்தார்கள்.. சரஸ்வதி சுதாவிடம் ,"நீ கூட போன்ல சொன்ன போது நம்பல ,சுனில் நல்லா இருக்கான் சுதா ,ஸ்வேதாவுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பான் .,அவன் என்னை இங்க வந்து பார்த்ததும் அனுசரனையா பேசுறதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .
நல்ல பையனா தெரியுறான் ...இவனையே ஸ்வேதாவுக்கு பேசி முடிச்சிடலாம் "
என்று மகிழ்ச்சியாய் சொன்னாள். ஸ்வேதா இதை கேட்டதும் .,மகிழ்ச்சியாய் இருப்பதா , கவலை படுவதா என்று அவளுக்கே தெரியவில்லை...

18 January 2010

தெளிவான முடிவு 23

"சேகர் ,நான் இப்பவே மீனாக்ஷி ஹாஸ்பிடலுக்கு போகணும் ,அம்மாவை அங்க அட்மிட் பண்ணி இருக்காங்க ,ட்ரைன்ல இருந்து கீழ விழுந்தாடன்கலாம் .நீங்க கோபாலன் சார் ட்ட சொல்லிடுங்க " என்று ஸ்வேதா சொல்ல சேகரும் ,"சரி நீங்க முதல்ல கிளம்புங்க ,நான் பாத்துக்குறேன் ...."என்றான்.

ஸ்வேதா ஹாஸ்பிடல் சென்றாள்.அவளின் அம்மா சரஸ்வதி படுக்கையில் படுத்து இருக்க ,சுதாவும் சுரேஷும் அருகில் நின்றிருந்தார்கள் .ஸ்வேதா சுரேஷை பார்த்து ,"என்ன நடந்துச்சு மாமா ?டாக்டர் என்ன சொன்னாங்க ?"
என்று கேட்க ,"பயபட்ரதுக்கு ஒண்ணுமில்ல ,தலைலையும் கால்லையும் தான் அடி பட்டிருக்கு , சீக்கிரமே வந்து அட்மிட் பண்ணிட்டதால டாக்டர் உடனே ட்ரீட்மென்ட் பண்ணிட்டாங்க " என்றான்.

சரஸ்வதி லேசாக கண் விழிக்க ,ஸ்வேதாவை கண்டதும் ஆனந்தம் அடைந்தாள். பேச முயற்சித்தாள்,"எப்படி இருக்க ஸ்வேதா ...?" என்றாள்.ஸ்வேதா ,"நான் நல்லா இருக்கேன் மா , நீ இறங்கும் போது பார்த்து இறங்க வேணாமா,இப்படி விழுந்திடேயே மா ,?சரி நல்ல வேலை பெரிசா ஒன்னும் ஆகல..." என்றாள். "அக்கா மாமா நீங்க ஆபீஸ் போங்க,நான் அம்மாவை கிட்ட இருந்து பார்த்துக்குறேன்,நான் இன்னைக்கு லீவ் சொல்லிட்டு தான் வந்தேன் என்று ஸ்வேதா சொல்ல சுதாவும் ,"சரி நாங்க கிளம்புறோம் ஏதாவதுன்னா உடனே என்கோ மாமாவுக்கோ கால் பண்ணு ,பெரிய ஆபத்து ஏற்படாம ,சின்ன காயத்தோட போயிருச்சு ,எல்லாம் கடவுள் செயல் "என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள் .

அங்கு அப்படியே ஒரு நாள் போனது ..மாலை 5 மணி இருக்கும் சுனிலின்
கால் தான் அவளுக்கு நினைவூட்டியது ....."ஸ்வேதா , நான் sunil பேசறேன் ..எனக்கு இன்னைக்கு வேலை சீக்கிரமே முடிஞ்சிருச்சு நான் உங்க சென்டர்க்கு இப்போ வரட்டுமா ? உங்களுக்கு ஏதாவது கிளாஸ் இருக்கா? " என்று அவன் கேட்க ,அப்பொழுது தான் சுனில் நேத்து சொன்னது நினைவில் வர ,"இல்ல சுனில் ,நான் இப்போ சென்டர்ல இல்ல ,இன்னைக்கு காலையில் அம்மா சென்னை வந்தாங்க ,அப்போ ரயிலில் இருந்து இறங்கும் போது கீழ விழுந்துட்டாங்க ,அதனால நான் அவுங்க கூட மீனாக்ஷி ஹாஸ்பிடல்ல இருக்கேன் .என்று சொன்னாள்.சுனில் , " ஒ அப்படியா ஸ்வேதா ,சரி நீங்க அம்மாவை பாருங்க ,நாம இன்னொரு நாள் மீட் பண்ணிக்கலாம் " என்று சொல்லி போனை துண்டித்தான் .ஸ்வேதாவுக்கு சுனில் பேசியது ஆறுதலாய் இருந்தாலும் அம்மாவின் நிலைமையே அவளின் மனதில் இருந்தது .

17 January 2010

தெளிவான முடிவு 22

ஸ்வேதா சென்ட்டர் சென்றாள்.அவள் எதிர்பார்த்தது போல சேகரும் ஏற்கனவே வந்திருந்தான்.ஸ்வேதா சேகரை பார்க்கும் போது ,தலை குனிந்து ஒன்றும் பேசாமல் சென்றான் ,ஸ்வேதா ,"சேகர் நான் உங்க கிட்ட நேத்து நடந்தது பத்தி பேசணும் ,கொஞ்சம் இங்க வந்து உட்காருங்க " என்று சொல்ல சேகரும் அங்கு அமர்ந்தான். ஸ்வேதா ," சேகர் உங்கள நான் நல்ல நண்பரா நினைத்து தான் பழகினேன் ....நேத்து நீங்க பேசியது என்னை யோசிக்க வைத்தது ஆனால் இப்பொழுது என்னால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை , இது என்னோட வாழ்க்கை சம்மந்த பட்ட விஷயம் என்பதால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ,நீங்க என் நிலைமையை புரிஞ்சிகுவீங்கன்னு நினைக்கிறேன் " என்று ஸ்வேதா சொன்னாள்.

சேகர் ,"ஸ்வேதா நேத்து லீவ் போட்டு போன போதே நெனச்சேன் , நீங்க என்கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்த்திருக்க மாடீங்கன்னு , ஆனாலும் என்னால உங்க கிட்ட சொல்லாம இருக்க முடியல.உங்கமுடிவு எதுவா இருந்தாலும் எனக்கு சம்மதம் ,நீங்க என்ன தப்பா நினைக்காம இவ்வளவு தூரம் பேசினதே எனக்கு ஆறுதலா இருக்கு "என்று சொன்னான் .

அப்போது ஸ்வேதாவின் செல் போன் ஒலிக்க ,அக்கா சுதாவிடம் இருந்து வந்தது அந்த call ."என்னக்கா அம்மா வந்துட்டாங்களா "?என்று ஸ்வேதா கேட்டாள். அதற்கு சுதா, நீ சீக்கிரம் மீனாக்ஷி மருத்துவமனைக்கு வா " என்றாள்.ஸ்வேதா பதட்டத்துடன் ,"என்னாச்சு அக்கா .. என்னாச்சு நான் உடனே வர்ரேன் " என்று சொல்ல சுதா ,"நம் அம்மா ரயிலில் இருந்து இறங்கும் போது கீழே விழுந்து விட்டார் நல்ல வேலை மாமா அழைக்க சென்றதால் உடனே அம்மாவை ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறார்.

15 January 2010

தெளிவான முடிவு 21

சப்னா ஸ்வேதாவிடம் ,"நான் நீ சொன்ன எல்லாத்தையும் கேட்டேன் ......உன் வாழ்க்கை உன் எதிர்காலம் உன் கையில் தான் இருக்குது நீ விரும்புன ஆளை விட உன்ன விரும்புற ஆளை திருமணம் செய்வது தான் நல்லது ன்னு ,நீ சினிமால கூட கேட்டிருப்ப ஆனா இது தான் உண்மை .இப்போ என்ன எடுத்துக்கோ நான் காதலித்து தான் திருமணம் செஞ்சேன் .என்ன அவர் நல்லா வச்சிருக்காரு ....நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் .நீ சொன்னத கேட்ட போது சுனிலை உனக்கு ரெண்டு நாள் முன்ன தான் தெரியும் , ஆனா சேகரை 3 , 4 மாசமா தெரியும். அதனால நீ யோசிச்சு முடிவெடு ." என்றாள். இதை கேட்ட ஸ்வேதாவுக்கு தலையே சுற்றியது.

சேகர் அவளுக்கு செய்த உதவிகள் நினைவுக்கு வந்தது.அவள் ஷாப்பிங் சென்றது ,மொபைல் வாங்கியது அப்போது சேகர் அவளுடன் நடந்து கொண்ட விதம் ,அணுகிய முறை அனைத்தையும் யோசித்து பார்த்தாள். சேகரின் கண்ணியம் ஸ்வேதாவுக்கு புரிய வந்தது . இந்த விஷயம் அக்கா மாமாவுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்து அவர்களிடம் எதுவும் பேசாமல் சீக்கிரமே தன் அறைக்கு சென்று படுத்து கொண்டாள். இரவு முழுவதும் சேகரை பற்றிய சிந்தனையே அவள் மனதை ஆக்கிரமித்தது .

அவனின் மாற்றத்திற்கு காரணம் நாம் தான் என்ற குற்ற உணர்வு அவளுக்குள் எழுந்தது .சரி என்ன ஆனாலும் பரவாயில்லை நாம் சேகரிடம் நாளை பேசிவிட வேண்டும் .....என்று முடிவெடுத்தாள்.மறு நாள் காலையும் வந்தது ,எப்போதும் போல சென்டர்க்கு கிளம்பி கொண்டிருந்தாள் .
அங்கு சுதா வந்து ,"ஸ்வேதா இன்னைக்கு 7 மணிக்கே கிளம்பிட்ட ? நீ நேத்து சீக்கிரமே தூங்க போய்ட்டதால அம்மா வர்ற விசயத்த சொல்ல முடியல , அம்மா நேத்தே கிளம்பிட்டாங்கலாம் காலையில் வந்திடுவாங்க.இன்னைக்கு லீவ் போடு ..அம்மா வர்றாங்க நீ வீட்ல இரு .சென்னை ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் போன் பண்ணறேன்னு சொன்னாங்க...." என்றாள்.
"அப்படியா அம்மா வர்றாங்களா ரொம்ப சந்தோசம் .....ஆனா ..........
நான் இன்னைக்கு சென்டர் அவசியம் போகணும் கொஞ்ச வேலை இருக்கு,அம்மா வந்ததும் நீ போன் பண்ணு நான் உடனே வந்துடறேன்" என்று சொல்லி புறபட்டாள் ஸ்வேதா.

14 January 2010

தெளிவான முடிவு 20

சேகர் ,ஸ்வேதா வேகமாக சென்றதை பார்த்து மனமுடைந்தான்.எப்படியும் அவளுக்கும் நம்மை பிடித்திருக்கும் என்று உறுதியாக நினைத்தவனுக்கு அதிர்ச்சி தான்.ஏதாவது பதில் சொல்லி இருந்தாலோ,அல்லது இவனை திட்டி இருந்தாலோ சேகருக்கு ஒரு முடிவு தெரிந்திருக்கும் .ஆனால் அது எதுவும் நடக்கவில்லை .
ஹோடெலில் நடந்ததை சிலர் வேடிக்கை பார்க்க ,சேகர் பில் கட்டி விட்டு அங்கிருந்து சென்றான் . சென்டர் வாசலுக்கு வரும் போது ,ஸ்வேதா பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்வது தெரிந்தது ..நாம போய் ஸ்வேதாகிட்ட பேசலாமா ?இல்லை இல்லை நாளை வரை பொறுத்திருப்போம் என்று எண்ணி சென்டர் உள்ளே சென்றான்.பஸ்சில் அமர்ந்த ஸ்வேதாவுக்கு ஒரே பதட்டம் ....குழப்பமான மனதுடனே வீடு சென்றாள். " சேகர் இன்று என்னிடம் இப்படி சொல்லிவிட்டார் .?நான் அன்பாக பழகியதை இப்படி தவறாக நினைத்து விட்டாரே ? பரிசு கொடுத்ததை எல்லாம் இப்படி பெரிதாக எடுத்து கொண்டாரே ?என்று பல கேள்விகள் எழுந்தது அவளுக்கு .
அவர் இருக்கும் இடமே தெரியாது , யாரிடமும் அதிகம் பேச மாட்டார் என்று சென்டர்ல உள்ள அனைவரும் சேகர் பற்றி கூறியது நினைவில் வந்தது ஸ்வேதாவுக்கு ."ஒரு வேளை நான் தான் அவரின் இன்றைய மாற்றத்திற்கு காரணமோ ?நான் தான் அவரிடம் நெருங்கி பழகி அவரை இவ்வாறு பேச வைத்து விட்டேனோ ? என்று தன்னையே நொந்து கொண்டாள்.
இனி நான் எப்படி செனட்டர் செல்ல முடியும்,சேகர் முகத்தில் எவ்வாறு முழிப்பேன் ?அவருக்கு என்ன முடிவு சொல்லுவேன் ?என்று கலக்கத்துடன் இருந்தாள் .யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது .......உடனே தன் நெருங்கிய தோழி சப்னா நினைவுக்கு வர ,அவளுடைய நம்பரை தேடி பிடித்து கால் செய்தாள்.சப்னா ,ஸ்வேதாவின் நெருங்கிய தோழி ,காதல் திருமணம் செய்து கொண்டு திருச்சியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறாள் .
ஸ்வேதாவும் சப்னாவும் சிறு வயது முதலே நல்ல தோழிகள் .ஸ்வேதா சென்னை வரும் போது , சப்னாவிடம் சொல்லி விட்டு வந்தாள்.அதன் பிறகு இவள் அவளை தொடர்பு கொள்ளவே இல்லை .
ஸ்வேதா,"சப்னா நான் ஸ்வேதா பேசறேன் எப்படி இருக்க ?" என்று தொடங்க
சப்னா,"என்னடி என் ஞாபகம் இப்ப தான் வந்துச்சா ? வேளை கிடைச்சுதா ?எப்படி இருக்க ?அக்கா,மாமா ,அம்மா எல்லாரும் நல்லா இருக்காங்களா ? என்று தொடர்ந்து பேசி கொண்டிருந்தாள்.ஸ்வேதா குறிக்கிட்டு ,"எல்லாரும் நல்ல இருக்காங்க ...சப்னா என்ன மன்னிச்சுக்க டி ,இங்க நான் பிஸியா இருந்ததால தான் உன்கிட்ட பேச முடியல ...இப்போ எனக்கு நீ ஒரு உதவி செய்யணும் " என்று தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட அனைத்தையும் சொன்னாள். சப்னாவின் பதில் அவளை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

தெளிவான முடிவு 19

ஸ்வேதா இது கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் . சேகர் ஸ்வேதாவின் முகத்தை பார்க்காமல் , தலை குனிந்து அவன் மனதில் உள்ளதை கொட்ட ஆரம்பித்தான் ." ஸ்வேதா நீ சென்டர் க்கு வந்து சேர்ந்த புதிதில் என்னிடம் உன்னை பற்றி சொல்லும் போது உன் வெகுளித்தனம் எனக்கு பிடித்தது . ஆங்கிலம் சரியாக பேச கற்று கொள்ள வேண்டும் என்று என் உதவியை நாடி வந்த போது உன் தைரியம் எனக்கு பிடித்தது ,முப்பதே நாட்களில் ஆங்கிலத்தை சரளமாக பேசி எல்லோரையும் அசத்திய போது உன் திறமை எனக்கு பிடித்தது,நீ எனக்கு வாட்ச் பரிசாக தந்த போது உன் அன்பு எனக்கு பிடித்தது , உன் குடும்ப விசயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்ட போது உன் நட்பு எனக்கு பிடித்தது.நீ எனக்கு ஒரு நல்ல தோழி என்று நினைத்திருந்தேன்.

ஆனால், என்று உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் என்று கேள்விபட்டேனோ அன்று என் மனதில் சஞ்சலம் ஏற்பட ஆரம்பித்தது . அந்த இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை .உன்னை மற்றொருவருடன் திருமண கோலத்தில் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை .அப்போது தான் நீ எனக்கு நல்ல தோழி மட்டும் அல்ல ,என்னுடைய வாழ்கை துணைவியும் நீ தான் என்று உணர்ந்தேன்.

என்னுடைய உணர்வுகளுக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று நினைப்பில் தான் உன்கிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டேன் , உன்னுடைய பதில் என்னுடைய வாழ்வுக்கு தெளிவான முடிவாக இருக்கும் ." என்று சேகர் சொல்லி முடித்து நிமிர்ந்து ஸ்வேதாவை பார்த்தபோது ,அவள் கலங்கிய கண்களுடன் வாடிய முகத்துடன் ஒன்றும் பேசாமல் வேகமாக சென்று விட்டாள்.

12 January 2010

தெளிவான முடிவு 18

ஸ்வேதா பிரிய மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு சென்றாள்.ஆட்டோ வில் செல்லும் போதே அவள் அக்கா சுதவிடமும் மாமா சுரேஷிடமும் சுனில் சொன்னதை சொல்ல ,"ரொம்ப சந்தோசம் டி சுனிலின் அம்மா அப்பாவ பார்த்தா நல்லவங்க போல தான் தெரியுது ,நான் கூட முதல்ல சுனிலை பத்தி தப்பா தான் நெனச்சேன் , ஏன்னா அவன் உன்ன பத்தி ஒன்னும் சொல்லாம இருந்தான்,பாரு உன்கிட்ட நேராவே சொல்லிட்டான்....அம்மாக்கு இன்னைக்கே போன் செய்து சொல்லறேன் .நல்ல நாள்ல நல்ல முடிவு தெரிஞ்சிடுச்சு ...." என்று சுதா மகிழ்ச்சியாய் சொன்னாள். சுரேஷும் ," நான் அப்பவே சொன்னேன் ,நீங்க தான் நம்பள ,இப்போ புரிஞ்சிடீங்கள்ள " என்றான். சென்ட்டர் வர , ஸ்வேதா அங்கு இறங்கி உள்ளே சென்றாள்.

இந்த நாள் நம் வாழ்வின் பொன்நாள் என்று முக மலர்ச்சியுடன் தன் வகுப்பறைக்கு சென்றாள் . நாளை எப்போது வரும் ,சுனிலை பார்க்கும் போது என்ன பேசலாம் ? என்ற சிந்தனை தான் அவளுக்குள் .சுனிலுக்கு எதாவது மெசேஜ் அனுபலாமா என்று யோசித்தாள்,வேணாம் அவர் இப்பொது பிசியாக இருப்பார் என்று அவளையே சமாதானம் செய்து கொண்டாள். அவள் தன் அறையுள் இப்படி நினைத்து கொண்டிருக்க ,அங்கு வந்தான் சேகர்.முன்பெல்லாம் சேகர் வந்தால் , ஆர்வமாய் பேசுவாள் .

ஆனால் இப்போதோ சேகரை பார்த்தாலே , இவன் ஏன் இங்கு வர்றான் ? என்று தான் தோன்றுகிறது . சேகர் ," ஹாய் ஸ்வேதா ,இன்னைக்கு நல்லா டிரஸ் பண்ணி இருக்கீங்க ? எதாவது function க்கு போயிருந்தீங்களா ?காலையில் கூட permission போட்டிருந்தீங்க !! இப்பெல்லாம் என்கிட்டே எதுவுமே சொல்றது இல்ல ?" என்று ஆதங்கப்பட்டான் .ஸ்வேதா ,"உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு ஒன்னும் இல்ல சார், மாமாவோட நண்பர் வீட்டு கிரகப்ரவேசதுக்கு போயிட்டு வந்தேன் அதான் ...வேற ஒண்ணுமில்ல சார்" என்றாள்.சேகர் மேலும் தொடர ," O.K இன்னைக்கு ஒரு சின்ன treat ,Lunch க்கு நாம பக்கத்துல உள்ள restaurant க்கு போலாமா "?என்று கேட்டான் .
ஸ்வேதாவும் மறுப்பேதும் சொல்லாமல் ,"ஒ.கே நாம போகலாம் " என்றாள்.
மதிய நேரம் வர,இருவரும் ஹோட்டல் சென்றார்கள்,சாப்பிட்டார்கள் .ஐஸ் கிரீம் சாப்பிடும் போது ஸ்வேதா ஆரம்பித்தாள் ,"இன்னைக்கு எதற்கு treat எதாவது விசேஷமா?" என்று கேட்க .சேகர் ,"இல்ல ஸ்வேதா சும்மா தான்............ "என்றான் . சற்று தடுமாற்றத்துடன் சேகர் ,"ஸ்வேதா நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது ,நீங்க சென்டர் வந்து சேர்ந்த நாள்ல இருந்து உங்கள எனக்கு புடிக்கும் ...அப்போ ஆசையாய் இருந்தது........ இப்போ காதலாய் ...... . மாறிடிச்சு " என்றான்.

11 January 2010

தெளிவான முடிவு 17

ஸ்வேதாவும் அவனை பின்தொடர்ந்தாள்.எல்லா ரூமையும் காண்பித்துவிட்டு ,பால்கனி இல் நின்றார்கள் . அப்போது தான் இருவரும் நேருக்கு நேர் பார்த்து கொண்டார்கள்.சுனில் ,"இப்போ இங்க யாரும் இல்ல ,இப்பயாவது சொல்லுங்க என்னை உங்களுக்கு புடிச்சிருக்கான்னு ? உங்க மெசேஜ் நேத்து கிடைச்சுது ,உங்களுக்கு கால் பண்ண தான் நினைத்தேன் ,ஆனா வீடு விசயத்தில மறந்துட்டேன் .எப்படியும் இன்னைக்கு கேட்ரனும்னு முடிவு பண்ணேன் ,சொல்லுங்க ஸ்வேதா ....எங்க அம்மா அப்பாவ பார்த்திருபீங்க ,அவர்களை அன்பாய் பார்த்து கொள்ளவும் என்னையும் நன்றாக புரிந்து கவனித்து கொள்ளவும் நல்ல பெண்ணை தேடி கொண்டிருக்கிறேன். இந்த வீடு உங்களுக்கு புடிச்சிருக்கா ?" என்று அவன் அடுக்கி கொண்டே போக ,ஸ்வேதாவுக்கு தலை கால் புரியவில்லை .....

ஸ்வேதாவும் கொஞ்சம் தைரியம் வந்தவளாய் ,"சுனில் நீங்க தான் சொல்லணும் ,பெண் பார்க்க வருபவர்கள் தான் பெண்ணை பிடிச்சிருக்கா பிடிக்கலையா ன்னு சொல்லுவாங்க ,நீங்க அன்னைக்கும் இதே கேள்விய தான் கேடீங்க ,இன்னைக்கும் கேட்குறீங்க ,நீங்க முதல்ல சொல்லுங்க நான் சொல்லறேன் " என்றாள் ."ஒ.கே ஸ்வேதா ,இதில் மறைபதற்கு ஒன்றும் இல்லை , உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ,உங்கள பிடிக்கலன்னா ,நான் இப்படியா உங்க கிட்ட கேட்டுகிட்டு இருப்பேன் ? நீங்க புரிஞ்சிகுவீங்கன்னு பார்த்தேன் ...இருந்தாலும் என் வாயால சொல்ல வச்சுடீங்க ...இப்பயாச்சு நீங்க சொல்லுங்க " என்றான்.

ஸ்வேதா சந்தோஷத்தில் ,"எனக்கும் உங்களை புடிச்சிருக்கு ,நீங்க இந்த பதில அன்றே சொல்லி இருக்கலாம் ,நான் ரெண்டு நாளா இதை நினைத்து குழம்பி போய்ட்டேன்." என்று மனதில் பட்டதை சொன்னாள்.சுனில் ," ஸ்வேதா
I am so happy today,இன்னைக்கே அம்மா அப்பா கிட்ட நம்ம கல்யாணத்த பத்தி பேச போறேன் .....நீங்களும் உங்க அக்க மாமா கிட்ட சொல்லிடுங்க ....நாலைக்கு 6 மணிக்கு உங்கள சென்டர் வந்து பார்கிறேன் " என்றான் ."நம்ம போல உள்ள சுமாரான பொண்ணுக்கு ,சுனில் மாதிரி அழகான ஒருத்தேன் பேசுறதே பெருசு ..அதிலும் இப்படி நம்மை பார்த்து வலிய வந்து திருமணம் செஞ்சுக்க போரேன்னு சொன்னா .......ஸ்வேதா நீ கொடுத்து வைத்தவள் "என்று தன மனதிற்குள் சொல்லி மகிழ்ந்தாள் .

அங்கு வந்த சுதா ,"இந்த வீடு ரொம்ப நல்லா இருக்கு ,நல்ல location ,நல்லா கட்டி இருக்காங்க எவ்ளோ ஆச்சு சுனில் ?"என்று கேட்க ,சுனில் பதிலாக ," registration எல்லாம் சேர்த்து 30 lakhs ஆச்சு ,நல்ல பில்டர் ன்னு எல்லோரும் சொன்னாங்க ,Documents எல்லாம் பக்காவா இருந்தது அதான் ஆபீஸ் ல லோன் எடுத்து உடனே முடிச்சிட்டேன் " என்றான். "சரி சுனில்,ஆபீஸ் க்கு லேட் ஆச்சு ,நாங்க கிளம்புறோம் ..நீங்க அம்மா அப்பாவ கூட்டிட்டு அவசியம் எங்க வீட்டுக்கு வரணும் " என்று சுரேஷ் சொல்லி புறப்பட்டான் ,சுதாவும் ஸ்வேதாவும்
அவனை தொடர்ந்தார்கள் .

10 January 2010

தெளிவான முடிவு 16

காலையில் எல்லோரும் சுனிலின் கிரகப்ரவேசதுக்கு புறப்பட்டார்கள் . ஸ்வேதா தன்னை நன்றாக அலங்காரம் செய்து கொண்டாள்.மங்களகரமாக மஞ்சள் நிற பட்டு புடவை அணிந்தாள்.சுதா அரை மனதுடனே வந்தாள்.சுனிலின் வீட்டின் முன் அவர்கள் சென்ற ஆட்டோ நின்றது .வாசலில் நின்றிருந்த சுனில் அவர்களை வரவேற்றான் ."வாங்க சுரேஷ் வாங்க சுதா , நீங்க வந்ததில எனக்கு ரொம்ப சந்தோசம் ,ஸ்வேதா உள்ள வாங்க .."என்று சொல்ல ,எல்லோரும் அவனை பின்தொடர்ந்தார்கள் .பட்டு வேட்டி சட்டையில் அவன் அழகாக இருக்க,ஸ்வேதா அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
வீட்டின் உள்ளே சென்ற சுனில் ,அவன் பெற்றோர் இருக்கும் இடத்திற்கு இவர்களை அழைத்து சென்று ,அவர்களுக்கு அறிமுக படுத்தினான்.சுனிலின் அம்மா அப்பா ,அவன் முன்பே சொன்னது போல வயதானவர்களாக தென்பட்டார்கள்.இருவரும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள் .சுனில் ,"அம்மா நான் நேத்து சொன்னேன்ல அவுங்க இவர்கள் தான் ,இது ஸ்வேதா மா நான் இவுங்கள தான் அன்றைக்கு ஆபீஸ் போய் பார்த்தேன் " என்று சொன்னான் .சுனிலின் அம்மா சுமதி ஸ்வேதா வை பார்த்து புன்னகைத்தாள்.
ஸ்வேதாவும் வணங்கி சிரித்தாள்.
சுமதி ," உங்க எல்லாத்தையும் பத்தி சுனில் சொன்னான் .உங்கள பார்க்க சந்தோசமா இருக்கு .என்னால தான் உங்க வீட்டிற்கு வர முடியல, நீங்க எல்லோரும் குடும்பத்தோடு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி, இருந்து டிபன் சாப்பிட்டு தான் போகணும் " என்று சொன்னார். சுமதியை பார்த்த சுதாவுக்கு அவர்களின் நிலைமை புரிந்தது .இதனால் தான் சுனில் இப்படி நடந்து கொண்டான் என்று புரிந்து கொள்ள முடிந்தது .
சுமதி ,"ஸ்வேதா நீ இந்த புடவையில் அழகா இருக்க மா ,சுனிலை உனக்கு புடிச்சிருக்கா ?"என்று கேட்க ,ஸ்வேதாவுக்கு ஒன்றும் புரியல ,"ஆமா புடிச்சிருக்குன்னு சொல்லிடலாமா" என்று யோசனை வர,ஆனால் அதை மறைத்து , "அக்கா மாமாக்கு பிடிச்சா எனக்கும் ஒ.கே தான் ,அவர்களால தான் நான் இந்த நிலைமை வந்திருக்கேன்" என்றாள் . அதற்குள் சுனில் அனைவரையும் சாப்பிட அழைத்தான் .எல்லோரும் சென்று சாப்பிட்டு வந்தார்கள்.சுரேஷும் சுதாவும் ,அங்கு வந்திருந்த நண்பர்களிடம் பேசி கொண்டிருக்க ,ஸ்வேதா தனியாக நின்று கொண்டிருந்தாள் .சுனில்,"வாங்க ஸ்வேதா வீட்டை சுத்தி பார்க்கலாம் " என்றான்.

தெளிவான முடிவு 15

அடடா சுனில் நம் வீட்டிற்கு வந்தும் நம்மால் பேச முடியவில்லையே... என்று தன்னையே நொந்து கொண்டாள். அப்போது சுரேஷும் சுதாவும் பேசி கொண்டிருப்பது காதில் விழுந்தது .சுதா , " என்ன இது புதுசா இருக்கு ,நீங்க ஏன் சுனிலை வீட்டிற்கு அழைத்து வந்தீங்க ? பெண் பார்க்கவே வீட்டிற்கு வராதவன் ,இன்னைக்கு மட்டும் ஏன் வந்தான் ? முன்ன பின்ன தெரியாத அவன் வீடு கிரகப்ரவேசதுக்கு நம்ம போனுமா ? ஸ்வேதா வ நேத்து தான் பார்த்தான்,இன்னும் அதுக்கே முடிவு தெரியல ....இது என்னமோ எனக்கு சரியாய் படல " என்று அடுக்கி கொண்டு போனாள்.
"நீ ஏன் அப்படி நினைக்கிற ..சுனில் எனது நண்பனின் நண்பன் ..நண்பன் என்ற முறையில் நம்மை கூப்பிடிருக்கிறான் .இதுல என்ன தப்பு இருக்கு ?உன்னால முடிஞ்சா போ ,இல்லேன்னா போகாதே ....ஸ்வேதாவை அவனுக்கு பிடிச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்...அதனால கூட அவன் நம்மல அழைத்திருக்கலாம் , " என்று சுரேஷ் தொடர,ஸ்வேதா குறிகிட்டாள்.
" மாமா நீங்க பேசினத நான் கேட்டுகிட்டு தான் இருந்தேன் ...இன்னைக்கு நான் சுனிலுக்கு மதியம் போன் செய்தேன் ,என்னோட கொலீக் வந்ததால, அவர்ட்ட சரியாய் பேச முடியல,நீங்க வந்ததும் சொல்லலாம்னு நெனைச்சேன் ,மாமா நாளைக்கு எத்தனை மணிக்கு நாம் சுனில் வீட்டுக்கு போறோம் " என்று ஸ்வேதா சொல்ல,சுதா கோபத்தில் ," என்னடி பேசற, நாங்க போகலாமா போக வேண்டாமா ன்னு சண்ட போட்டுட்டு இருக்கோம்.நீ என்னன்னா எப்போ போகலாம் ன்னு கேக்குற .?அந்த சுனில்..இன்னும் பதிலே சொல்லல ...அவங்க வீட்டுக்கு எந்த முறை வச்சி போறது ?
அதற்கு ஸ்வேதா ," மாமா சொன்ன மாதிரி ,நாம friend என்ற முறையில் போவோம் ....இதுல ஒன்னும் தப்பில்லக்கா ..."என்று பேச ,சுதா பதிலுக்கு ,"சரி நீங்க ரெண்டு பேரும் சொல்றதால நாம நாளைக்கு போவோம் ,"
என்றாள்.எப்படியோ அக்காவை சம்மதிக்க வைத்து விட்டோம் என்ற திருப்தியில் ,ஸ்வேதாவுக்கு மனதிற்குள் மகிழ்ச்சி ...நாளை எப்படியும் சுனிலை பார்க்க போகிறோம் ,அவனோடு பேச போகிறோம் என்று கனவுகளில் மிதந்தாள்.

08 January 2010

தெளிவான முடிவு 14

எப்படியோ சமாளித்து சேகரை அனுப்பினாள்.சுனிலிடம் பேசுவதற்கு இந்த இடம் சரி பட்டு வராது என்று தோன்றியது ஸ்வேதாவுக்கு . ஒரு ஐடியா தோன்ற .."சுனில் என்னால் இன்று உங்களிடம் பேச முடிய வில்லை .
சோ சாரி நீங்கள் 6.30 மணிக்கு மேல் எனக்கு போன் செய்யுங்கள் " என்று மெசேஜ் செய்தாள். அவள் மனமெல்லாம் சுனிலை பற்றிய நினைவு தான்.நல்ல சந்தர்ப்பம் அமைந்தும் நம்மால் பயன்படுத்த முடியவில்லையே .....என்று அவளுக்குள் குமுற ஆரம்பித்தாள்.

மாலை 6.30 எப்போது வரும் என்று தன் கை கடிகாரத்தை உற்று பார்த்து பார்த்து சோர்ந்து போனாள்.சீக்கிரமாகவே சென்டர் ல இருந்து புறப்பட்டு வீடு சென்றாள். 6.30 மணியும் ஆனது ...ஆனால் சுனிலிடமிருந்து எந்த போன் காலும் வரவில்லை. மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த அவளுக்கு ஏமாற்றம் தான்."தன்னை தவறாக நினைத்து விட்டாரோ " என்று தான் அவளுக்கு தோன்றியது .

எப்படியும் போன் கால் வரும் என்று தன் மொபைல் ஐ கையிலே வைத்து கொண்டிருந்தாள் .மணி 7.15 இருக்கும் ,வீட்டில் அழைப்பு மணி ஒலிக்க
ஸ்வேதா போய் கதவை திறந்தாள்.அவளுக்கு இன்ப அதிர்ச்சி .

மாமா சுரேஷும் சுனிலும் அங்கு நின்றிருந்தார்கள்.
அக்கா அக்கா , மாமா மாமா என்று சொல்லி கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள். சுரேஷும் சுனிலும் சோபா வில் அமர ,சுதா வந்தாள்."என்ன சுனிலும் நீங்களும் ஒன்னா வந்திருக்கீங்க ? சுனில் வராருன்னு முன்பே சொல்லி இருந்தா dinner எதாவுது prepare பண்ணி இருப்பேனே ?என்றாள்.

சுனில் ,"நான் உங்க எல்லோரையும் invite பண்ண வந்திருக்கேன் .நான் தாம்பரத்ல ஒரு flat வாங்கி இருக்கேன் .நாளை காலை கிரகப்ரவேசம் வச்சிருகோம் ,நீங்க எல்லோரும் அவசியம் வரணும் ..உங்க வீடு எனக்கு தெரியாது ,அதனால சுரேஷுக்கு போன் செய்ஞ்சு அவரோட வந்தேன்.. நான் நேர்ல வந்து உங்களை அழைக்கணும்னு ஆசைப்பட்டேன் " என்றான்.

"காபி டீ யாவது குடிச்சுட்டு போங்க " என்று சுதா கேட்க ."இல்லேங்க இன்னும் பலரை கூப்பிட வேண்டி இருக்கு ,நான் கிளம்பறேன் " என்று சொல்லி அவர்கள் வீட்டை விட்டு சென்றான்.தன் அறையில் இருந்த ஸ்வேதா ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தாள் .

07 January 2010

தெளிவான முடிவு 13

புரண்டு புரண்டு பார்த்தாள்,தூக்கம் வரவில்லை ...நாளைக்கு என்ன பேசுவது ?சுனிலிடம் பேசலாமா பேச கூடாதா?என்று பல கேள்விகள் .பொழுதம் விடிந்தது ,சமையல் அறையில் இருந்த சுதாவிடம் ,"அக்கா நான் இன்னைக்கு சுனிலுக்கு போன் பண்ணி பேசவா ? எப்ப பேச ? என்ன பேச ? நீ சொல்லு கா ? ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுக்கா "என்று கெஞ்ச ஆரம்பித்தாள்."சரி ,நீ இன்னைக்கு சுனில்ட்ட பேசு ,அவன மாதிரி அழகான ஒருதன்ட்ட பேசுறதுக்கு என்ன தயக்கம் ? என்ன தான் கேட்குறான்னு பாரு ..நல்ல பதிலா சொல்லு ,நீ சொன்னா தான் அம்மாவ வர சொல்லி மேற்கொண்டு பேசலாம் " என்றாள் சுதா.
அக்கா சொன்னது ஆறுதல் தர சென்டர்க்கு உற்சாகமா சென்றாள்.மதியம் 2 மணி இருக்கும் ,இந்த நேரம் தான் சரியா இருக்கும் என்று ஸ்வேதாவுக்கு தோன்ற சுனில் கொடுத்த நம்பருக்கு call பண்ணினாள். "ஹாய் சுனில் ,நான் ஸ்வேதா பேசறேன்,நீங்க போன் பண்ண சொல்லி இருந்தீங்க ,அதான் ......நீங்க இப்போ free யா தான இருக்கீங்க ,உங்கள நான் disturb பண்ணலையே ?" என்று அவள் ஆரம்பிக்க அதற்கு சுனில் ," உங்க call க்கு தான் நான் காலையில் இருந்தே காத்துட்டு இருக்கேன் ....உங்க நம்பர்ல இருந்து தானே பேசுறீங்க ?" என்று கேட்க இவள் "ஆமாங்க "என்றாள் .
சுனில் ,"ஓகே ..உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா ,என்னடா நேத்து இத கேட்காம இப்போ கேட்கிறான்னு நீங்க நினைக்கலாம் ,நேத்து நீங்க கொஞ்சம் tension ஆ இருந்தீங்க ..அதான் " என்றான் .ஸ்வேதாவுக்கு என்ன சொல்றதுன்னா தெரியல சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ,"உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா சொல்லுங்க ?"என்று கேட்டாள்.அங்கு அவள் அருகில் சேகர் வருவதை கண்டு , "சுனில் நாம அப்புறமா பேசலாம் " என்று call ஐ துண்டித்தாள்.
"என்ன ஸ்வேதா ,லஞ்ச் முடிச்சாச்சா ?" என்று கேட்டான் சேகர் .ஸ்வேதா ஒன்றும் பேசாமல் தலையை அசைத்தாள்.இப்போ தான் கோபாலன் சார் ஐ பார்த்தேன் ..நேத்து உங்கள பெண் பார்க்க வந்தாங்கலாமே சொன்னாரு ,நீங்க சொல்லவே இல்ல ? என்று கேட்டான் . " ஆமா சார் நேத்து வந்தாங்க ,உங்க கிட்ட இன்னைக்கு சொல்லலாம்னு இருந்தேன் என்று மென்று முழுங்கினாள்.சேகர் ,"ஒ அப்படியா என்ன சொன்னாரு மாப்பிள்ளை உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரா "? என்று தொடர்ந்தான். "என்னடா இப்படி ஒரு தொல்லையா?" என்று அவள் புலம்ப ஆரம்பித்தாள்

தெளிவான முடிவு 12

அங்கு வந்த சேகர் ,"என்ன ஸ்வேதா இங்க நிக்கிறீங்க ? உங்க கிளாஸ் ல எல்லோரும் வந்துட்டாங்க ...நீங்க மறந்திடீங்களா?"என்று கேட்ட போது தான் ஸ்வேதா நினைவுக்கு வந்தாள். "ஆமா சார் இப்போ போகணும் ..." என்று அவசரமாக தன் புத்தகத்தை எடுத்து கொண்டு புறபட்டாள்.மணி மாலை 6.30 ஆனது வீட்டிற்கு செல்ல தயாரானாள்..சுதாவிடம் பேசினால் தான் ஒரு தெளிவு வரும் என்று வேகமாக பஸ் ஸ்டாப் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அப்போது மேகம் இருண்டு மழை பெய்ய ஆரம்பித்தது .....திடீரென்று காற்றுடன் மழை வருவதை கண்ட அவள் வேகமாக ஓடி ஒரு கடையின் அருகில் நின்றாள்.குடை ஏதும் இல்லாததால் தன் கையில் வைத்து இருந்த புத்தகத்தை தலையில் வைத்து மறைத்து கொண்டாள்.மொபைல் மணி ஒலிக்க பேசினாள். சுதா மறுமுனையில்,"என்ன ஸ்வேதா கிளம்பிட்டியா சீக்கிரம் வா ...எப்போவும் இந்த நேரம் வந்திடுவ ...உன்கிட்ட பேசணும்னு நானே சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன் "என்றாள்.ஸ்வேதா ,"அக்கா மழைல மாட்டிகிட்டேன் , வந்துடறேன் நீ பயபடாதே "என்று பேசி கொண்டே பார்த்தால் அங்கு சேகர் நின்றிருந்தான் .
ஸ்வேதா ," சேகர் சார் நீங்க என்ன இங்க நிக்கிறீங்க ?பைக் ல வேகமாக போக வேண்டியது தானே? " என்று கேட்க ,அதற்கு சேகர் " இல்ல ஸ்வேதா என்னோட பைக் க சர்வீஸ் க்கு விட்டுருக்கேன் , இன்னகின்னு பார்த்து இப்டி பேயுது ..ஆமா உங்க அக்கா வந்திருந்தாங்க போலிருக்கு ,நம்ம பியுன் ராமு சொன்னான் என்ன விஷயம் ? ஸ்வேதா " ஒன்னும் இல்ல சார் " என்று முடித்தாள் .மழையும் லேசாக விட ஆரம்பிக்க பஸ் பிடித்து வீடு சென்றாள். சுதாவும் சுரேஷும் அவளுக்காக காத்திருந்தார்கள் .ஸ்வேதா , சுனில் தன்னிடம் பேசிய அனைத்தையும் அவர்களிடம் கூறினாள்.

சுரேஷ் ,"அப்போ சுனிலுக்கு உன்னை பிடிச்சிருக்கு ,இல்லேன்னா ஒருவன் போன் நம்பர் கொடுத்து பேச சொல்லுவானா ? கேள்வி பட்ட வரை அவன எல்லோரும் நல்லவர்னு தான் சொல்றாங்க என்ன சொல்ற சுதா ?"என்று கேட்க அதற்கு சுதா ,"அப்படி சொல்ல முடியாதுங்க .. ஸ்வேதாவ அவருக்கு பிடிச்சிருந்தா நம்ம கிட்ட சொல்லி இருப்பார் ,இல்ல ஸ்வேதா கிட்ட சொல்லி இருப்பார் .அதுக்கு அப்புறம் போன் நம்பர் கொடுத்தா அதுலே அர்த்தம் இருக்கு ..ஆனா அப்படி எதுவும் நடக்கலையே " என்றாள். ஸ்வேதாவுக்கு குழப்பம் அதிகரிக்க அமைதியாக படுத்தாள்.

05 January 2010

தெளிவான முடிவு 11

அவர்கள் இருவரும் கதவை தள்ளி விட்டு வெளியே போனார்கள் .குளு குளு அறை தான் அது ...என்றாலும் ஸ்வேதாவுக்கு வேர்க்க ஆரம்பித்தது.என்ன பேச போகிறார் ? என்ன கேட்க போகிறார் ?என்று பல கேள்விகள் அவளுள் ..ஆனால் சுனில் எந்த வித பதட்டமும் இல்லாமல் அங்கு அமர்ந்திருந்தான்.நிசப்தமாக ஓரிரு நிமிடம் சென்றது.
பின் சுனில் எழுந்து ஸ்வேதாவின் அருகில் சென்று ,"ஹாய் ஸ்வேதா ,I am sunil glad to meet you " என்று ஆரம்பித்தான் .ஸ்வேதாவும் பதிலுக்கு ஹாய் என்றாள் வேறு என்ன சொல்வது என்று அவளுக்கு தோன்றவில்லை .சுனிலே தொடர்ந்தான் ," நான் உங்கள பார்த்ததுமே பிடிச்சிருக்கு என்று சொல்ல விரும்பல ..நீங்களும் என்னை பார்த்த 5 நிமிஷத்துல பிடிச்சிருக்கு ன்னு சொல்ல முடியாது..இது நம்ம இருவரின் வாழ்க்கை..எனவே நீங்க என்னை பத்தி தெரிஞ்சிக்கணும் நானும் உங்கள பத்தி தெரிஞ்சிக்கணும் .ரொம்ப இல்லேனாலும் அட்லீஸ்ட் கொஞ்சமாவது அவசியம் ....இதையே உங்க மாமா கிட்ட சொல்லி இருக்கலாம் ,இருந்தாலும் நானே உங்க கிட்ட சொல்லனும்னு தான் அவர்களிடம் அப்படி சொன்னேன்..இந்தாங்க என்னோட business கார்டு இதுல என் details இருக்கு நீங்க call பண்ணுங்க இல்லேனா உங்க நம்பர் கொடுங்க ,நாளைக்கு பேசலாம் ...இது நீங்க வேலை பார்க்கிற இடம் அதிக நேரம் இங்கு வேணாம்" என்று முடித்தான்.
இவ்வாறு கேட்டதும் ஸ்வேதாவுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ...சுனிலின் business card பெற்று கொண்டாள் . "எனக்கு நாளை கால் பண்ணுங்க எப்போனாலும் சரி "என்று கதவை நோக்கி நடந்தான் சுனில் .அவனை பின் தொடர்ந்தாள் ஸ்வேதா ..வெளியே நின்றிருந்த சுரேஷிடம் ஓகே நாம போகலாம் என்று சொல்லி கொண்டே இருவரும் சென்டர்விட்டு வெளியேறினார்கள்.
அவர்கள் சென்றவுடன் சுதா ," என்னடி பேசினீங்க ,உன்ன பிடிக்குதுன்னு சொன்னாரா " என்று ஆர்வமாய் கேட்க ..ஸ்வேதா ," இல்லக்கா அப்படி ஒன்னும் சொல்லல ..என்று இழுத்தாள்.அப்போது அங்கு கோபாலன் வர இருவரும் மௌனமானார்கள் ...சுதா,"தேங்க்ஸ் சார் நீங்க செய்த உதவிக்கு " என்றாள் .தலை அசைத்த படி கோபாலன் தன் அறையை நோக்கி நடர்ந்தார் .
சுதா ,"சரி வீட்டில் இது பற்றி பேசலாம் நான் கிளம்புறேன் ,பாபாவை கூப்பிடனும் மணி ஆயிடிச்சு " என்று அவளும் சென்றாள்.
ஸ்வேதாவுக்கு இன்னும் குழப்பம் அதிகம் ஆனது , ...ஒன்னு "உங்கள பிடிச்சிருக்கு ன்னு சொல்லலாம் இல்லேன்னா பிடிக்கலைன்னு சொல்லி இருக்கலாம் call பண்ணு ன்னாஎன்ன அர்த்தம் எனக்கு தலையே சுத்துது "
என்று தனக்குளே புலம்பினாள் .

04 January 2010

தெளிவான முடிவு 10

ஸ்வேதாவுக்கு டென்ஷன் அதிகம் ஆனது.மணி 3.05 இருக்கும் ,யாரோ வந்து கதவு தட்டுவது கேட்டது. ஸ்வேதாவை உள்ளறையில் அமர வைத்து விட்டு சுதா வேகமாக சென்று கதவை திறந்தாள். அவள் எதிர்பார்த்தது போல அங்கு மாப்பிள்ளை மற்றும் சுதாவின் கணவர் சுரேஷ் நின்றிருந்தார்கள்.சுதா ," உள்ள வாங்க உட்காருங்க " என்று சொன்னாள்.சுரேஷ் சுதாவிடம் ," சுதா இவர் பெயர் சுனில் ...இவர் சாப்ட்வேர் கம்பனில Programmer ஆ இருக்கார் ..இவருடைய நண்பருக்கு அவசர வேலை வந்துரிச்சு ,அதனால தான் நானும் சுனிலும் வந்தோம் " என்று சொன்னார்.
சுதாவுக்கு சுனிலை பார்த்ததும் புடித்து விட்டது.ஸ்வேதா சுமாரான அழகு தான் ..ஆனால் சுனிலை பார்த்து யாரும் பிடிக்காது என்று சொல்ல முடியாது .மாநிறமாக இருந்தாலும் அழகாக இருந்தான் .படிய வாரிய தலையுடன் சிரித்த முகத்துடனும் , அவன் இருப்பதை பார்த்த சுதாவுக்கு ஒரு சின்ன அச்சம் .இவனுக்கு நம்ம ஸ்வேதாவை புடிக்குமா என்று ??....
சுதா சுனிலிடம் ," நீங்க இங்க வந்து ஸ்வேதாவை பார்கிறது சந்தோசம் தான் ,உங்க அம்மா அப்பாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் ..." என்று இழுத்தாள்.
அதற்கு சுனில் ," எங்க அம்மா அப்பா என்னோட இஷ்டத்துக்கு குறுக்கே நிக்க மாட்டாங்க ...மேலும் அவர்களுக்கு வயசாகி விட்டது ,ஒவ்வொரு வீட்டுக்கு சென்று பார்த்து வர அவர்களால் முடியாது ....நான் ஒரே பையன் ..அவர்களுக்கு திருமணமாகி பல வருஷம் கழித்து தான் பிறந்தேன்.. அதனால தான் ,நான் அவுங்க கிட்ட சொல்லிட்டேன் ,நான் போய் பெண் பார்த்துட்டு வரேன் ...எனக்கு பிடிச்சிருந்த நாம மேற்கொண்டு பேசலாம்னு "
என்று அவன் பேச பேச ,ஸ்வேதாவுக்கு அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசை உருவானது ...சுரேஷ் ," சரி சுதா சும்மா பேசிட்டு இருக்காத ...இது நம்ம வீடு இல்ல ...அவரும் ஸ்வேதாவை பார்த்து விட்டு ஆபீஸ் போகணும் நானும் போகணும் ,சீக்கிரம் ஸ்வேதாவை கூப்பிடு " என்றான்.
சுதா, ஸ்வேதா இருக்கும் அறைக்கு சென்று ஏற்கனவே அவள் வாங்கி வைத்து இருந்த fanta வை glass இல் ஊற்றி ஸ்வேதா கையில் கொடுத்தாள். ஸ்வேதாவும் பல வித பயத்துடனும் தயக்கத்துடனும் , எதிர்பார்போடும் சுனிலை நெருங்கினாள் . அவனை பார்த்ததும் ஸ்வேதாவுக்கு பிடித்து போனது ... ஒரு புன்சிரிப்புடன் fanta வை கொடுக்க..அவனும் thanks என்று பெற்று கொண்டான் . ஸ்வேதா ஒரு வித பதட்டத்துடனே நின்றாள்..நம் கனவு நாயகன் இவன் தான் என்ற எண்ணம் அவளுக்கு அரும்பியது .
சுனில் ஸ்வேதாவை பார்த்துவிட்டு ," சுரேஷ் நான் ஸ்வேதா ட்ட கொஞ்ச நேரம் தனியா பேசணும்னு நினைக்கிறேன்" என்று கேட்டான். சுதாவும் சுரேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு சரி,"நாங்க வெளிய இருக்கோம் ,நீங்க பேசி விட்டு வாங்க "என்றார்கள் .

01 January 2010

தெளிவான முடிவு 9

ஸ்வேதாவுக்கு கோபம் வந்தது ,"என்னக்கா இப்போ வந்து இப்படி சொல்ற ,எப்போதும் பெண் பார்க்க வீட்டிற்கு தானே வருவாங்க .! ஏன் நான் வேலை பார்க்கிற இடத்தை எல்லாம் சொல்றீங்க ,இது சென்ட்டர்ஹெட் க்கு தெரிந்ததுன்னா அவ்ளோ தான் ...என்ன புடிச்சு திட்ட ஆரம்பிச்சிடுவாரு....நீயே சொல்லு இது நல்லா இருக்கா ?நான் எங்க போய் டிரஸ் பண்ணுவேன் ,எனக்கு கிளாஸ் வேற இருக்கு 2.30 க்கு தான் முடியும்....அரை மணி நேரத்துல அவுங்க வந்திடுவாங்க ..நான் என்ன செய்ய போறேனோ தெரியல ....சரி இது அம்மாக்கு தெரியுமா? " என்று படபடத்தாள் .
சுதா பொறுமையாக , "ஏன் இப்போ tension ஆகிற நான் கோபாலன் ட்ட பேசுறேன் ..மாபிள்ள ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கு அதான் எந்த formality உம் இல்லாம உன்ன இங்கயே பாக்க வராரு ...நீயும் பாரு பிடித்தால் மேற்கொண்டு பேசலாம் இல்லன்னா வேணாம்னு சொல்லிடலாம் மாமா உனக்கு நல்ல வரன் தான் பார்பாரு...நானும் அரைநாள் permission போட்டு தான் வந்திருக்கிறேன் ,பாப்பாவை கூட daycare ல விட்டேன் ...இங்கேயே wait பண்றேன் ...நீ போய் கிளாஸ் முடிச்சுட்டு சீக்கிரம் வா எதையும் நினைத்து மனச குழப்பிக்காத " என்றாள்.
ஸ்வேதாவும் வேகமாக சென்று தன் வேலையை முடித்து, சுதாவிடம் வந்தாள்...சுதாவும் தனக்கு தெரிந்த make up போட்டு ஸ்வேதாவை தயார் படுத்தினாள். ஸ்வேதாவுக்கு ஒரே வருத்தம் , தன்னை முதன் முதலாக பெண் பார்க்க வரும் போது,தான் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தாள்..ஆனால் அது போல் எதுவும் நடக்கவில்லை .....
அவளுக்கு பல சந்தேகங்கள் எழுந்தது .....ஏன் அவசரமாக இன்றே பார்க்க வேண்டும்....இங்க தான மாப்பிள்ளை இருக்கார் ...லீவ் நாளா பார்க்க வரலாம்,
அப்படி என்ன அவசரம் அதுவும் நான் வேலை பார்க்கும் இடத்தில பார்கனுமா ?
ஏன் ஏன் ? என்று பல கேள்விகள்....
சுதா கோபாலனிடம் பேசி விட்டு வந்தாள்.ஸ்வேதா ,"அக்கா சார் என்ன சொன்னாரு "என்று கேட்க ,சுதா ," கோபாலன் என்னோட நல்ல நண்பர் ,நான் சொல்லி தான் உனக்கு வேலை போட்டு தந்தார் ...நான் எல்லாத்தையும் எடுத்து சொன்னேன் ,அவரும் புரிந்து கொண்டார் ...அவரோட ரூம்லயே உன்னோட பெண் பார்க்கும் படலம் ...நீ கொடுத்து வச்சவடி" என்று நகைத்தாள் .3.00 மணியும் ஆனது சுதாவும்,ஸ்வேதாவும் சுவர் கடிகாரத்தையே பார்த்து கொண்டிருந்தார்கள் ......