மீனா ப்ரீதாவின் நெருங்கிய தோழி.....சிறு வயது முதல் ஒரே பள்ளி ,ஒரே வகுப்பு ,ஒரே கல்லூரி என்று இவர்கள் பயணம் தொடர்ந்தாலும் ,கல்லூரியில் மீனாவுக்கு கிடைத்தது (ECE) எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு தான் ,ப்ரீதாவுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கிடைத்தது.மீனாவின் மூலம் தான் இந்த கம்பெனிக்கு ப்ரீதா வந்தாள் .எனவே ப்ரீதா எப்படியாவது மீனாவுக்கு உதவி செய்ய எண்ணினாள் . மீனாவின் ரெசுமை வைத்து கொண்டு அவள் கம்பெனியில் உள்ள அனைத்து ஜாப் ஒபெனிங்க்ஸ் பார்த்தாள்.ஒன்றும் மீனாவுக்கு ஏற்றது போல் இல்லை.சரி பொறுத்திருந்து பார்ப்போம் என்று நினைத்தாள்.
வீடு சென்ற ப்ரீதாவுக்கு , அன்று இன்னொரு மாப்பிள்ளை வீட்டார் வருவது தெரிந்தது.சரி இந்த இடமாவது அமைய வேண்டும் என்று மாணிக்கமும் மாலாவும் பிரார்த்தனை செய்து கொண்டார்கள் .ப்ரீதாவும் தன்னை தயார் செய்து கொண்டு காத்திருந்தாள்.அவர்களும் வந்தார்கள்,....மாப்பிள்ளை ராகுல் , பல நகை கடைகளின் உரிமையாளர் . பல வீடுகள்,பல கடைகள் என்று ,ப்ரீதாவின் குடும்பத்தை விட பல மடங்கு உயர்ந்தவர்கள்.ராகுலும் பார்பதற்கு நன்றாகவே இருந்தான். ராகுலின் அம்மா ,"எங்களுக்கு பொண்ண பிடிச்சிருக்கு ,பொண்ணு வேலை பார்க்கிறதா சொன்னீங்க.... எங்க குடும்பதுல ,பெண்கள் யாரும் வேலைக்கு போறது இல்ல....ப்ரீதாவும் திருமணத்திற்கு பிறகு வேலைய விட்டுட்டு எங்க வீட்டு மருமகளா இருக்கணும்னு நாங்க ஆசைபடுகிறோம்....ராகுலும் அதையே தான் விரும்புறான்... அவன் கூட பேருக்கு ஒரு டிகிரி வச்சிருக்கான்....கடைய பார்த்துக்க என்ன பெரிய படிப்பு வேணும் ? சொல்லுங்க " என்று சொன்னார்.
இதை கேட்ட ப்ரீதா அதிர்ச்சி அடைந்தாள். இரு குடும்பத்தினரும் சில நிமிடம் பேச ,மாணிக்கம் ,"நாங்க ப்ரீதாகிட்ட கலந்து பேசிட்டு உங்க கிட்ட பேசுறோம் " என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.ப்ரீதா கோபத்தின் உச்சிக்கே சென்றாள்."என்னால் வீட்டிலே சும்மா உட்கார முடியாது பா....நான் இன்ஜினியரிங் படித்து முடித்து நல்ல வேலையில் இருக்கிறேன்...Ph.D படிக்கணும் ன்னு ஆசை இருக்கு ,படிப்பை பற்றி தெரியாத இந்த குடும்பமே வேணாம் பா ..........வேற நல்ல மாப்பிள்ளை பாருங்கப்பா" என்று சொன்னாள்.
அதற்கு மாலா ,"ப்ரீதா அப்படி எல்லாம் சொல்லாத...நான் என்ன வேலைக்கா போனேன்...வீட்டில் இருந்து தான் உன்னை கவனிச்சேன்....அவர்களோட கருத்தை சொல்றாங்க ...நீ கோபபடாத ...உனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்னா விட்டுவிடு...நாங்க சொல்லிடுறோம் ...வேற இடம் பார்க்க ப்ரோகர்ட சொல்றோம் " என்று கூறினாள். என்ன தான் மாலா கூறியது சரியாக இருந்தாலும் ப்ரீதாவால் ஏற்று கொள்ள முடியவில்லை.நம் வேலைய பாப்போம் என்று அவளுடைய லேப்டாப் பில் மூழ்கினாள்.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago