14 December 2009

பஸ் ஜோக்ஸ்

பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.
அப்புறம் என்னாச்சி?
பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.
____________________________________________________________________
இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்கேள நீங்க என்ன ஜோசியரா?
இல்ல, இந்த பஸ் டிரைவர்.
____________________________________________________________________
பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?
ரைட் சொல்லிவிட்டார்.

____________________________________________________________________
பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒரு பின் படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும்?.
நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என போர்டு போட்டிருக்கே.

___________________________________________________________________ பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?
அதனால் உட்கார முடியாது.
____________________________________________________________________
நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக் கிட்டு நின்னேன்.
அப்புறம்..என்ன ஆச்சு ..?
கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்.
___________________________________________________________________ கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்.
அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு.
___________________________________________________________________
3 யானை பஸ் ஸாண்டிற்கு வந்தது. பஸ்ஸில் 2 யானை மட்டும் ஏறியது 1 யானை ஏறவில்லை ஏன்?
அது வழியனுப்ப வந்தது.
___________________________________________________________________
பஸ்ஸீல் சீட் இருந்தும் நின்னுகிட்டே வந்தேன்
சீட் இருந்தும் ஏன் நின்னுகிட்டே வந்தீங்க?
சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க.
____________________________________________________________________
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
___________________________________________________________________ வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
___________________________________________________________________
ஹோடெல்லா காசு இல்லேன்னா மாவாட்ட சொல்லுவாங்க ...
பஸ்ல காசு இல்லேன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா ??
___________________________________________________________________
பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணா பஸ் வரும் ......
புல் (full) ஸ்டாப்ல வெயிட் பண்ணா புல் வருமா???
___________________________________________________________________
பஸ் கண்டக்டர கல்யாணம் பண்ணது தப்ப போச்சு ..
ஏன் ?
எல்லாத்துக்கும் விசில் அடிக்கிறாரே......
____________________________________________________________________

தெளிவான முடிவு 6

ஸ்வேதா சென்டர் வந்து சேர்ந்தாள்.சேகர் வந்திருந்தானா ? என்று பார்த்தாள்.அவன் தன்னுடைய வேலையில் மும்பரமாய் இருந்தான் .அவள்,
சேகரிடம் ,"ஹாய் சேகர் , குட் மார்னிங் ,நீங்க எனக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்கீங்க .....அதற்காக உங்களுக்கு ஒரு கிப்ட் ,என் நன்றிய தெரிவிக்க ஒரு பரிசு....கட்டாயம் நீங்க வாங்கிக்கணும் வேண்டாம்னு சொல்லிடாதீங்க " இதனை எதிர் பார்க்காத சேகர் முதலில் சற்று தயங்கினான் , பின்பு பெற்று கொண்டான் . "தேங்க்ஸ்" என்ற பதில் மட்டும் வந்தது .
ஸ்வேதாவும் தன்னுடைய வேலையில் மூழ்கினாள்.வேலை முடித்து வீடு
வந்தவுடன் ...அவளுக்கு சேகர் பற்றி எண்ணம் தோன்றியது...."ஏன் அவர் ஒன்றும் சொல்லாமல் என் பரிசை வாங்கி கொண்டார் ....என்னை தப்பா நெனைசுட்டாரா"? என்று யோசித்து கொண்டிருந்தாள் ....நாட்கள் பல சென்றது ......ஸ்வேதாவும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் . அவளுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை தன் அம்மாவுக்கு அனுப்பி விடுவாள். அக்காவுடன் இருப்பதால் , அவளுக்கும் பணம் கொடுத்து விட்டு ,மீதம் இருப்பதாய் தனக்கு வைத்து கொண்டாள்.
சென்டர் வரும் எல்லோரிடமும் மொபைல் இருப்பதை பார்த்தாள்.தனக்கும் வாங்க வேண்டும் என்று ஆசை தோன்ற , அதை பற்றி சேகரிடம் கேட்டாள்.
சேகர்," எனக்கு ஒரு நல்ல மொபைல் வாங்கனும்னு ஆசையா இருக்கு ,நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் " என்றாள்.சேகர் அவளிடம் ,"நம்ம சென்டர் அருகில் நோக்கியா ஷோ ரூம் இருக்கு ,நீங்க afternoon வாங்க நாம்
போய் பார்க்கலாம் " என்றான். தனியே ஒரு ஆணுடன் கடைக்கு செல்வது என்பது ஸ்வேதாவுக்கு முதல் முறை .
அவர்கள் இருவரும் லஞ்ச் முடிந்தவுடன் ,அருகில் இருந்த கடைக்கு சென்றார்கள்..சேகர் , Rs.2000 க்கு ஒரு நல்ல நோக்கியா போனும் ,ப்ரீயாக சிம் கார்டும் வாங்கி கொடுத்தான் .. ஸ்வேதாவுக்கு சந்தோசம் ,அந்த மொபைல் கலரும் ,நம்பரும் அவளுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது ....சேகரிடம் "ரொம்ப தேங்க்ஸ் " என்றாள்..சேகர் அதற்கு "ஸ்வேதா போன தடவ மாதிரி இப்பவும் எனக்கு வாட்ச்,கிப்ட் ,பரிசு ன்னு என்ன அந்நியன் ஆக்கிடாதிங்க " என்று சிரித்த படியே சொன்னான் ...
ஸ்வேதா மொபைல் தன் கையில் வந்தவுடன் உலகமே தன் கையில் இருப்பது போல் உணர்ந்தாள்.operate பண்ண தெரியாமல் விழித்தாள்...சேகர் தான் ,தன் செல் நம்பரை போட்டு அவளுக்கு கற்று கொடுத்தான் ... உடனே தன் அம்மாவுக்கு call பண்ணி பேசினாள்.