07 January 2010

தெளிவான முடிவு 13

புரண்டு புரண்டு பார்த்தாள்,தூக்கம் வரவில்லை ...நாளைக்கு என்ன பேசுவது ?சுனிலிடம் பேசலாமா பேச கூடாதா?என்று பல கேள்விகள் .பொழுதம் விடிந்தது ,சமையல் அறையில் இருந்த சுதாவிடம் ,"அக்கா நான் இன்னைக்கு சுனிலுக்கு போன் பண்ணி பேசவா ? எப்ப பேச ? என்ன பேச ? நீ சொல்லு கா ? ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுக்கா "என்று கெஞ்ச ஆரம்பித்தாள்."சரி ,நீ இன்னைக்கு சுனில்ட்ட பேசு ,அவன மாதிரி அழகான ஒருதன்ட்ட பேசுறதுக்கு என்ன தயக்கம் ? என்ன தான் கேட்குறான்னு பாரு ..நல்ல பதிலா சொல்லு ,நீ சொன்னா தான் அம்மாவ வர சொல்லி மேற்கொண்டு பேசலாம் " என்றாள் சுதா.
அக்கா சொன்னது ஆறுதல் தர சென்டர்க்கு உற்சாகமா சென்றாள்.மதியம் 2 மணி இருக்கும் ,இந்த நேரம் தான் சரியா இருக்கும் என்று ஸ்வேதாவுக்கு தோன்ற சுனில் கொடுத்த நம்பருக்கு call பண்ணினாள். "ஹாய் சுனில் ,நான் ஸ்வேதா பேசறேன்,நீங்க போன் பண்ண சொல்லி இருந்தீங்க ,அதான் ......நீங்க இப்போ free யா தான இருக்கீங்க ,உங்கள நான் disturb பண்ணலையே ?" என்று அவள் ஆரம்பிக்க அதற்கு சுனில் ," உங்க call க்கு தான் நான் காலையில் இருந்தே காத்துட்டு இருக்கேன் ....உங்க நம்பர்ல இருந்து தானே பேசுறீங்க ?" என்று கேட்க இவள் "ஆமாங்க "என்றாள் .
சுனில் ,"ஓகே ..உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா ,என்னடா நேத்து இத கேட்காம இப்போ கேட்கிறான்னு நீங்க நினைக்கலாம் ,நேத்து நீங்க கொஞ்சம் tension ஆ இருந்தீங்க ..அதான் " என்றான் .ஸ்வேதாவுக்கு என்ன சொல்றதுன்னா தெரியல சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ,"உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா சொல்லுங்க ?"என்று கேட்டாள்.அங்கு அவள் அருகில் சேகர் வருவதை கண்டு , "சுனில் நாம அப்புறமா பேசலாம் " என்று call ஐ துண்டித்தாள்.
"என்ன ஸ்வேதா ,லஞ்ச் முடிச்சாச்சா ?" என்று கேட்டான் சேகர் .ஸ்வேதா ஒன்றும் பேசாமல் தலையை அசைத்தாள்.இப்போ தான் கோபாலன் சார் ஐ பார்த்தேன் ..நேத்து உங்கள பெண் பார்க்க வந்தாங்கலாமே சொன்னாரு ,நீங்க சொல்லவே இல்ல ? என்று கேட்டான் . " ஆமா சார் நேத்து வந்தாங்க ,உங்க கிட்ட இன்னைக்கு சொல்லலாம்னு இருந்தேன் என்று மென்று முழுங்கினாள்.சேகர் ,"ஒ அப்படியா என்ன சொன்னாரு மாப்பிள்ளை உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரா "? என்று தொடர்ந்தான். "என்னடா இப்படி ஒரு தொல்லையா?" என்று அவள் புலம்ப ஆரம்பித்தாள்

தெளிவான முடிவு 12

அங்கு வந்த சேகர் ,"என்ன ஸ்வேதா இங்க நிக்கிறீங்க ? உங்க கிளாஸ் ல எல்லோரும் வந்துட்டாங்க ...நீங்க மறந்திடீங்களா?"என்று கேட்ட போது தான் ஸ்வேதா நினைவுக்கு வந்தாள். "ஆமா சார் இப்போ போகணும் ..." என்று அவசரமாக தன் புத்தகத்தை எடுத்து கொண்டு புறபட்டாள்.மணி மாலை 6.30 ஆனது வீட்டிற்கு செல்ல தயாரானாள்..சுதாவிடம் பேசினால் தான் ஒரு தெளிவு வரும் என்று வேகமாக பஸ் ஸ்டாப் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அப்போது மேகம் இருண்டு மழை பெய்ய ஆரம்பித்தது .....திடீரென்று காற்றுடன் மழை வருவதை கண்ட அவள் வேகமாக ஓடி ஒரு கடையின் அருகில் நின்றாள்.குடை ஏதும் இல்லாததால் தன் கையில் வைத்து இருந்த புத்தகத்தை தலையில் வைத்து மறைத்து கொண்டாள்.மொபைல் மணி ஒலிக்க பேசினாள். சுதா மறுமுனையில்,"என்ன ஸ்வேதா கிளம்பிட்டியா சீக்கிரம் வா ...எப்போவும் இந்த நேரம் வந்திடுவ ...உன்கிட்ட பேசணும்னு நானே சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன் "என்றாள்.ஸ்வேதா ,"அக்கா மழைல மாட்டிகிட்டேன் , வந்துடறேன் நீ பயபடாதே "என்று பேசி கொண்டே பார்த்தால் அங்கு சேகர் நின்றிருந்தான் .
ஸ்வேதா ," சேகர் சார் நீங்க என்ன இங்க நிக்கிறீங்க ?பைக் ல வேகமாக போக வேண்டியது தானே? " என்று கேட்க ,அதற்கு சேகர் " இல்ல ஸ்வேதா என்னோட பைக் க சர்வீஸ் க்கு விட்டுருக்கேன் , இன்னகின்னு பார்த்து இப்டி பேயுது ..ஆமா உங்க அக்கா வந்திருந்தாங்க போலிருக்கு ,நம்ம பியுன் ராமு சொன்னான் என்ன விஷயம் ? ஸ்வேதா " ஒன்னும் இல்ல சார் " என்று முடித்தாள் .மழையும் லேசாக விட ஆரம்பிக்க பஸ் பிடித்து வீடு சென்றாள். சுதாவும் சுரேஷும் அவளுக்காக காத்திருந்தார்கள் .ஸ்வேதா , சுனில் தன்னிடம் பேசிய அனைத்தையும் அவர்களிடம் கூறினாள்.

சுரேஷ் ,"அப்போ சுனிலுக்கு உன்னை பிடிச்சிருக்கு ,இல்லேன்னா ஒருவன் போன் நம்பர் கொடுத்து பேச சொல்லுவானா ? கேள்வி பட்ட வரை அவன எல்லோரும் நல்லவர்னு தான் சொல்றாங்க என்ன சொல்ற சுதா ?"என்று கேட்க அதற்கு சுதா ,"அப்படி சொல்ல முடியாதுங்க .. ஸ்வேதாவ அவருக்கு பிடிச்சிருந்தா நம்ம கிட்ட சொல்லி இருப்பார் ,இல்ல ஸ்வேதா கிட்ட சொல்லி இருப்பார் .அதுக்கு அப்புறம் போன் நம்பர் கொடுத்தா அதுலே அர்த்தம் இருக்கு ..ஆனா அப்படி எதுவும் நடக்கலையே " என்றாள். ஸ்வேதாவுக்கு குழப்பம் அதிகரிக்க அமைதியாக படுத்தாள்.