சுமன் ,கல்லூரி நாட்களில் உதவி என்று கேட்டு வரும் நண்பர்களுக்கு தன்னால் இயன்ற வரை உதவி செய்வான்.உதவி என்பது அவனிடம் இருந்து பணத்தை கடனாக பெறுவது தான்.கடன் என்று தான் கேட்பார்கள்.....ஆனால் அது காந்தி கணக்கு தான். திருப்பி கொடுத்தவர்கள் சிலரே, கொடுக்காதவர்கள் பலர் . ட்ரீட் கொடு ,பார்ட்டி வை என்று அவனிடம் கொஞ்சம் பணம் இருந்தாலும் அனைத்தையும் பிடுங்கி செலவுசெய்யும் நண்பர்களே அவனுக்கு அதிகம் . சுமனை ஏமாளி என்றும் சொல்லுவார்கள்,நல்லவன் என்றும் சொல்லுவார்கள்.ஏழ்மை என்றால் என்ன என்றே அறியாதவன்.அவனின் அப்பா ஒரு வைர வியாபாரி.ஆனால் இன்று சுமனின் நிலைமை ??
அப்பா இறந்து விட ,அப்பாவின் சகோதரர்கள் அவனை ஏமாற்றி எல்லா சொத்தையும் பெற்று கொண்டார்கள்.அவர்களுக்கு சொத்து என்று இருப்பது குடியிருக்கும் வீடு மட்டுமே ,அதுவும் அம்மாவின் பெயரில் இருப்பதால் தான் சுமனின் உறவினர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை? பிசினஸ் க்கு உதவுமே என்று B.Com படித்தான் .பட்டம் பெற்றான்.படித்து முடித்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன , அப்பாவுக்கு உதவுகிறேன் பிசினஸ் ஐ வளர்க்க போகிறேன் என்று சொல்லி நாட்களை வீணடித்து விட்ட சுமன் , இன்று
அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் ??
வேலைக்கு செல்வது என்று முடிவெடுத்தான்.தன்னால் முடிந்த வரை பல கம்பெனிகளுக்கு அப்ளை செய்தான்.எங்கிருந்தும் அவனுக்கு ஒரு பதிலும் வரவில்லை. பல இடங்களுக்கு அலைந்து வேலை தேடி பார்த்தான் ,ஒன்றும் பிடிபடவில்லை.நண்பர்கள் பலர் இருந்தும் , அவர்களிடம் தன் நிலையை சொல்லி கேட்க அவனுக்கு பிடிக்கவில்லை . இப்படி தான் ஒரு நாள் ,ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வாக்-இன் இருந்தது, சென்றான் ,நன்றாக தான் செய்தான் .வெளியே அமருங்கள் என்று சொல்ல அவனும் முடிவுக்காக காத்திருந்தான் .செலக்ஷன் லிஸ்டில் அவனது பெயர் இன்ப அதிர்ச்சி !!!.
கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்பினான் ,அருகில் நின்றிருந்தது அவனின் தோழன் சரவணன். சரவணன் ஏழை மாணவன் ,சுமன் உதவியர்களில் இவனும் ஒருவன் . நெருங்கிய நண்பன் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவனும் நண்பன் தான் .சரவணன் , " சுமன் நான் உன்ன இங்க பார்த்ததுமே எனக்கு ஒரே ஆச்சர்யம்.டா ..உன்னை பின் தொடர்ந்து கவனித்தேன் ,உன்ன பத்தி நீ சொல்லும் போது தான் உன் குடும்ப சூழ்நிலைய கேட்டேன்,உன் நிலைமையை புரிஞ்சிகிட்டேன் .எங்க மானேஜர் ட்ட உன்ன பத்தி சொன்னேன் உனக்கு நான் referrence கொடுத்தேன். அன்னைக்கு நீ எனக்கு செமஸ்டர் பீஸ் கட்ட உதவின...அதனால தான் என்னால படிக்க முடிஞ்சிது..இந்த கம்பெனில நல்ல பொசிஷன் வர முடிந்தது .நீ மட்டும் எனக்கு உதவலேனா நான் எங்கயோ விவசாயம் பண்ணிட்டு இருப்பேன் ,இன்று இந்த நிலையில் இருப்பது உன்னால் தாண்டா உனக்கு நன்றி சொல்லனும்னு நான் நெனச்சிட்டு இருந்தேன் , இன்னைக்கு கடவுள் உன்னை இங்கே பார்த்து உதவ வச்சிட்டார்.... தாங்க்ஸ் டா மச்சான் " என்று சொன்னான்.
சுமனுக்கு எல்லாம் கனவு போல் இருந்தது......."எப்போதோ நான் செய்த உதவி இன்று என்னை காப்பாற்றுகிறது " இந்த மகிழ்ச்சியான நிகழ்வை தன் அம்மாவிடம் சொல்ல புறப்பட்டான்.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago