03 December 2009

தெளிவான முடிவு 1

ஸ்வேதா சென்னைக்கு புதுசு ...திருச்சி யில் இருந்து நேற்று தான் சென்னைக்கு வந்தாள். அவளது அக்காவின் தயவில் சென்னையில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை கிடைத்துள்ளது.சென்னை பற்றி அதிகம் தெரியாது.....
இன்று முதல் நாள்...கம்ப்யூட்டர் சென்டர்க்கு சீக்கிரமே சென்றாள்.
ஒரு வித பயத்துடனும் தயக்கத்துடனும் கதவை திறந்தாள்.அவளை புன்சிரிப்புடன் வரவேற்றான் சேகர் .சேகரும் அதே சென்டர்ல ஒரு
வருஷமா வேலை பார்க்கிறான்... அவன் அவளை பற்றி விசாரிக்க ஆரம்பிக்க அவளும் சகஜமாக பேச தொடங்கினாள்.
சென்டர் ஹெட் வந்து appointment letter கொடுத்தார் ....ஸ்வேதாவுக்கு எல்லை இல்லாத சந்தோசம்...முதல் வேலை முதல் நாள் சென்னை என்று மகிழ்ச்சியில் மிதந்தாள் .சேகர் , அவள் செய்ய வேண்டிய வேலை விவரங்களை சொல்லி கொடுத்தான்.அவளுடைய Job "faculty " தான்.என்ன அவளுக்கு english சரளமாக வராது !! அவளுடைய தோழிகள் முன்பே அவளிடம் சொல்லி இருந்தது ஞாபகம் வந்தது.....சென்னைல english kku தான் முதலிடம்...ஸ்வேதா படித்தது தமிழ் மீடியம்....காலேஜ் மட்டும் தான் இங்கிலீஷ் மீடியம் ......கஷ்டப்பட்டு படிச்சு எப்படியோ பாஸ் ஆயிட்டா .
சேகர் ,அவளிடம் நாளைக்கு நீங்க MS-OFFICE எடுக்க வேணும்னு சொன்னாரு...ஸ்வேதாவுக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரிந்திருந்தாலும்
"இங்கிலீஷ்" ல சொல்லி கொடுக்கணுமேன்னு ஒரே பயம்.......நாளைக்கு என்ன பண்றதுன்னு இன்னைக்கே யோசிக்க ஆரம்பிச்சிட்டா