09 December 2009

டாக்டர் ஜோக்ஸ்

அர்த்த ராத்திரியில் அந்த டாக்டர் கத்தியோட எங்க போறாரு ?
"அவருக்கு தூக்கத்துல ஆபரேஷன் பண்ற வியாதியாம் ".
________________________________________________________________________
குளிர் காலத்தில் ஆபரேஷன் பண்றதா இருந்தா அந்த டாக்டர்க்கு ரொம்ப பிடிக்குமாம் ......
ஏன் ?
ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்ல நடுங்குது ன்னு சொல்லி சமாளிக்க தான் .......
________________________________________________________________________
ஒருவர் கண் டாக்டரிடம் , டாக்டர் எனக்கு எதை பார்த்தாலும் இரண்டு இரண்டா தெரியுது .......
அதற்கு என் மூணு பேர் வந்திருக்கீங்க ன்னு டாக்டர் கேட்டாராம் .....
___________________________________________________________________
கண் வலின்னு டாக்டர்ட்ட போனியே என்ன ஆச்சு ?
அவரே பார்க்கும் நேரம் 9 -12 ன்னு போட்டிருக்கார்...
அவருக்கே கண்ணு அப்ப தான் தெரியும் போலிருக்கு....
நாம வேற நல்ல டாக்டர்ட்ட போகலாம்...
___________________________________________________________________
டாக்டர் , 10 மணிக்கு நீங்க சாப்பிட சொன்ன மாத்திரையை 6 மணிக்கே சாப்பிட்டு விட்டேன். அப்புறம் என்னாச்சு?
நான் கடிகாரத்தை 10 மணிக்கு திருப்பி வைச்சிட்டேன்.
நல்ல அறிவாளி .......
___________________________________________________________________ டாக்டர் ,நேத்து நீங்க கொடுத்த டியூப் மாத்திரை பெரிசா இருந்தது ஆனாலும் கஷ்ட்டப்பட்டு எப்படியோ முழுங்கிட்டேன்
அடப்பாவி தெம்பெரச்சர் பார்க்க வச்சிருந்த தர்மா மீட்டரை முழுங்கிட்டயா?
___________________________________________________________________
என்னது காய்ச்சலுக்குன்னு போன உனக்கு ஆப்ரேஷன் நடந்துச்சா, இது என்ன கொடுமை ?
அவங்க வெச்சிருந்தா தர்மா மீட்டரை முழுங்கிட்டேன், அதான்!!!
____________________________________________________________________
நோயாளி : டாக்டர் , என் காதுக்குள் பல்லி போயிருச்சி ?
டாக்டர் : ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்த ?
நோயாளி: ஏற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.
____________________________________________________________________ மருந்து குடித்தவுடன் ஒருவர் எகிறி எகிறி குதிக்கிறாறே ஏன்?
டாக்டர் ,மருந்தை சாப்பிடும் முன் நன்கு குலுக்கி விட்டு சாப்பிட சொன்னாராம். ஆனால் அவர் மருந்தை குலுக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டாராம். அதான்.
____________________________________________________________________ ஒரு சைடு மூக்ல மட்டும் பொடி போடுறீங்களே ஏன்?
மூக்குப் பொடி போடறதை டாக்டர் பாதியா குறைச்சுக்க
சொன்னாருங்க அதான்.
____________________________________________________________________
இருமல், இருமல்னு டாக்டர்ட்ட போனியே, டாக்டர் என்ன சொன்னார்?
இது இருமல் தான்னு அவரும் ஒப்புக்கிட்டார்.
____________________________________________________________________
இந்த டாக்டர் ரொம்ப மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன், போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.
___________________________________________________________________
அந்த டாக்டர் போலின்னு கண்டுபிடிச்சிட்டியா, எப்படி?
கால்ல வெடிப்பு இருக்குதுன்னே!!!
உள்ளே போனவர் கம் பாட்டிலை எடுத்துட்டு வந்து ஒட்டமுயற்சிக்கறாரு.
அந்த டாக்டர் போலின்னு கண்டுபுடிச்சிட்டேன் ......
எப்படின்னே ?
கால்ல ஆணி இருக்கு ன்னு சொன்னேன்...
காலேண்டர் எடுத்து மாட்ட சொல்றாரு ....
____________________________________________________________________
நர்ஸ் : நீங்க இன்னிக்கு ஆப்ரேஷன் பண்ண இருந்த பேஷண்ட்
தப்பிச்சு ஓடிட்டார்.
டாக்டர் : சரி பரவாயில்லை விடுங்க பிழைச்சு போகட்டும்.
____________________________________________________________________
நோயாளி : வயிறு எரியுது டாக்டர்
டாக்டர் :எப்போதிலிருந்து?
நோயாளி : என் மனைவி பக்கத்து வீட்டு காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர்.
____________________________________________________________________
இரும்பிக்கிட்டே இருக்கிற அவன் ஏன் டாக்டர் போட்டாவை
பார்த்துகிட்டே இருக்கான்
அவங்க அம்மா இருமல் வந்தா டாக்டரை பார்க்க சொன்னாங்களாம்.
____________________________________________________________________ என்னங்க! அவர் வாசல்ல ரோமியோபதி டாக்டர்னு போர்டு போட்டிருக்கார்!
ஆமாங்க. அந்த டாக்டர் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி!
____________________________________________________________________
கேஸ் சிலிண்டரை எடுத்துக் கெண்டு டாக்டரை பார்க்க போகிறார் ஏன்?
கேஸ் பிராப்ளம் வந்தால் டாக்டர் தன்னை வந்து பார்க்க சொன்னாராம்.
____________________________________________________________________ என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...?
அது பிள்ளையார் சுழியாம்....
_____________________________________________________________________
டாக்டர் நான் செத்து போய்விடுவேனா ?,
இல்லை...! இல்லை...! நான் வைத்தியம் பண்ணினவங்கள்ள பத்துக்கு ஒன்பது பேர்தான் சாவாங்க...! நீங்கபொழச்சிப்பீங்க.
____________________________________________________________________ அவர் ஏன் கண்னை கட்டி கொண்டு இனிப்பு சாப்பிடுகிறார்.
டாக்டர் இனிப்பை கண்ணால் கூட பார்க்கக்கூடாதுன்னு சொல்லி விட்டாராம். ____________________________________________________________________
டாக்டர்,கொஞ்ச நாளா என் கணவருக்கு தூக்கத்துல பேசற வியாதி இருக்கு...
பகல்ல பேசறதுக்கு நீங்க கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாய் போயிடும். ____________________________________________________________________
கொடுத்த பணத்தை தரலைன்னா பல்லை புடுங்கிடுவேன்னு சொல்லிட்டு போறாறே யார் அவர்?
எங்க ஏரியா பல் டாக்டர்...!
____________________________________________________________________ டாக்டர் என்னை பத்து நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு
நல்லா தூங்கணுமே... ஆபீஸ்க்கு லீவு போடறிங்களா?
ம்ஹும் ஆபிஸ்க்கு லீவு போடாம போயிடுவேன்.
____________________________________________________________________
ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ள போகும்போது எதுக்கு டாக்டர் நிறைய புத்தகம் எடுத்துக்கிட்டு போறாரு?
புத்தகம் படிச்சு படிச்சு ஆப்ரேஷன் பண்ணுவாரு.
____________________________________________________________________
வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்.
இதிலொன்னும் தப்பில்லையே
திருடப் போன வீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!
____________________________________________________________________ ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு
அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...!
____________________________________________________________________
டாக்டர் இந்த ஆப்ரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?
அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில் இருந்து நான் பிழைச்சிடுவேன்.
____________________________________________________________________
உங்களுக்கு எப்பயிலேர்ந்து தலைவலி அதிகமா இருக்கு?
உங்க பீஸ் பில்லை பார்த்ததிலிருந்து டாக்டர்.
____________________________________________________________________
டாக்டர் நோயாளியிடம் மருந்து கொடுத்தார். நோயாளி டாக்டரிடம் டானிக் எந்த அளவு சாப்பிடனும் என்றார். டாக்டர் 1 மூடி, 2 வேளை சாப்பிடனும் என்றார்.
மறுநாள் நோயாளி டாக்டரிடம் ஒருவேளை சாப்பிட்ட பின் எவ்வளவு டானிக் சாப்பிடனும் என்றார். டாக்டர் அதே 1 மூடி என்றார்.
அதற்கு நோயாளி அந்த மூடியை நேற்றே சாப்பிட்டேன். இன்று சாப்பிட மூடி இல்லையே சார் என்றார்.
_______________________________________________________________________
டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?
அப்படியா? சும்மாவா இருந்தீங்க..
இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.
_______________________________________________________________________
டாக்டர் நீங்க ஆபேரஷன் பண்ணினதுல இருந்து எனக்கு ஒரே தும்மலா வருது.
அடடா...! என்னோட பொடி டப்பா உங்க வயிலுத்துல தான் இருக்கா?
____________________________________________________________________
ஒரு பருவப்பெண்னின் தகப்பனார் ஒரு டாக்டர். அவர் மகளிடம் அவசரம் அவசரமாக பேசினார். அந்த ஸ்டெதஸ் கோப் எடு, சூட்கேஸை எடு, எமர்ஜென்ஸி கால்ல யாரோ நான் உடனே வராவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லுகிறார்கள்.
பெண் நிதானமாக சொன்னாள் அப்பா அந்த போன் எனக்கு வந்தது.
____________________________________________________________________
டாக்டர் என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்?
அப்பவாது அவர் பேசட்டும் விட்டுடுங்க...!
____________________________________________________________________
உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.
_____________________________________________________________________
தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொல்றீங்க ஆனா என்னால் முடியாது டாக்டர்
ஏன்?
எங்க கோழி வெள்ளை முட்டைதான் போடும் டாக்டர்.
_____________________________________________________________________
ஸ்பூனை ஏன் இரண்டாக உடைச்சீங்க...!
அரை ஸ்பூன் மருந்து மட்டும் டாக்டர் சாப்பிடச் சொன்னாரே
_____________________________________________________________________
டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட் டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான் முழுங்க சிரமமா இருந்தது.
அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?
________________________________________________________________________
ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்!
எது?
நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது!
_______________________________________________________________________
உங்க வயித்துல நிறைய கேஸ் இருக்கு
எத்தனை சிலிண்டர் ஆகும் டாக்டர்?
____________________________________________________________________
டாக்டர் என் மாமியார் கால்ல முள் குத்திடுச்சு
முள்ளை எடுக்கணுமா?
முள் சின்னது. அதையேன் தொந்தரவு பண்ணணும்? காலை எடுத்துடுங்க.
____________________________________________________________________
ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்?
எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னே.
____________________________________________________________________ பகல் கனவு பலிக்குமா டாக்டர்...!
பலிக்காது ஏன் கேட்கறீங்க...?
நீங்க ஆபரேசன் செஞ்சு, நான் பிழைக்கிற மாதிரி கனவு கண்டேன்.
____________________________________________________________________
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் . ஏன்?
ஏன்னா என் தம்பி ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்.
_____________________________________________________________________
டாக்டர் தொழிலை விட்டுடலாம்னு பார்க்கிறேன்.
ஏன் பேஷண்ட் யாரும் வர்றதில்லையா?
இல்ல பேஷண்ட் யாரும் பிழைக்க மாட்டேங்கிறாங்க !!
____________________________________________________________________
ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.
பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!
____________________________________________________________________
நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்
எப்படி சொல்றீங்க?
உங்களுக்கு ஏதாவது ஆப்ரேஷனா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க.
____________________________________________________________________
நோயாளி - 10 வருடமா எனக்கு ஞாபகமறதி இருக்கு டாக்டர்
டாக்டர் - ஏன் இவ்வளவு நாட்களாக தாமதாமக வருகிறீர்கள்.
நோயாளி - மறந்து போச்சு டாக்டர்.
____________________________________________________________________
உங்களுக்கு அல்சராமே?
அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?
____________________________________________________________________
இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்...!
அப்படியா ...! எப்படி...!
இன்னிக்கு நடக்க இருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வச்சிட்டார்...!
_____________________________________________________________________

தெளிவான முடிவு 5

ஸ்வேதா இரவெல்லாம் சிந்தித்து தன்னை ஒரு படி முன்னேற்றி கொள்ள நினைத்தாள்.காலையில் எழுந்து ஆங்கில பத்திரிகை படிக்க ஆரம்பித்தாள்.தன்னுடன் LIFCO Dictionary வைத்து கொண்டு அர்த்தங்களை புரிந்து ,க்ராம்மருடன் பயில முயன்றாள்.... சென்டர்ல சேகருடன் நன்றாக ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்தாள்..இவ்வாறு அவள் செய்த முயற்சிகள் ஸ்வேதாவை ஆங்கிலத்தில் சரளமாக பேச உதவிற்று ...
1 மாதம் எப்படி போனதென்றே தெரியவில்லை...கோபாலன் ஸ்வேதாவை அழைத்த பொது தான் அவளுக்கு புரிந்தது ......"நீங்கள் நாளையில் இருந்து உங்கள் faculty job ஐ தொடரலாம் " என்று கோபாலன் கூறியதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். வேகமாக சென்று சேகரிடம் தான் முதலில் கூறினாள். தன் நன்றியையும் தெரிவித்தாள்.ஏனென்றால் அவன் தான் பல வகையில் ஸ்வேதாவுக்கு உதவி செய்தான்.
அடுத்த நாளும் வந்தது......மனதைரியமும் ,துணிச்சலும் ,நம்பிக்கையும் ஸ்வேதாவுடன் கை கோர்த்து கொண்டன .... தன் கிளாஸ் ஐ நன்றாக எடுத்து முடித்தாள்.தனக்கே ஒரு நிறைவு வர ....நாம் இதே போலவே தொடர வேண்டும் என்று நினைத்து கொண்டாள் .கோபாலனும் ஸ்வேதாவை அழைத்து "Good Improvement Keep it Up" என்று சொல்ல ....மிகவும் ஆனந்தம் அடைந்தாள்.சென்டரில் பல பேர் வேலை பார்த்தாலும் சேகர் தான் அவளுக்கு நல்ல நண்பன். எனவே ,தான் இப்படி மாற உதவிய அவருக்கு எதாவது செய்ய
வேண்டும் என்று நினைத்தாள்.
சேகருக்கு ஒரு நல்ல பரிசு வாங்கி தர எண்ணினாள்.என்ன வாங்கி தருவது என்றே அவளுக்கு ஒரே குழப்பம் ........கடைக்கு சென்று பல பரிசு பொருள்களை பார்த்தாள்....அங்கு அவள் கண்ணுக்கு அழகிய கைகடிகாரம் தென்பட்டது ......இது தான் சரியான கிப்ட் என்று தோன்ற...ஸ்வேதா உடனே அதை வாங்கினாள்.
நாம் எப்படியும் நாளை இதை சேகரிடம் கொடுத்து விட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு வீட்டிற்கு சென்றாள். மறுநாள் காலை சென்டர்க்கு புறபட்டாள்.பேருந்தில் வரும் போது ,தான் கிப்ட் கொடுத்தால் அதை சேகர் ஏற்று கொள்வாரா ....தன்னை தவறாக நினைப்பாரா என்ற கேள்வி அவளை குழப்பியது.....