28 December 2009

தெளிவான முடிவு 7

ஸ்வேதாவும் சேகரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். சேகர் மற்றவர்களிடம் கூட அதிகம் பேச மாட்டான் ,ஆனால் ஸ்வேதாவிடம் அவனை பற்றியும் பகிர்ந்து கொண்டான்.ஸ்வேதாவுக்கு சென்னையில் உள்ள பல இடம் சேகர் மூலம் தான் தெரிய வந்தது...அன்றும் அப்படி தான் , இவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்.
ஸ்வேதா அப்போது அவனிடம் ," என் அக்கா குழந்தைக்கு பிறந்த நாள் வருது ,அவளுக்கு ஒரு நல்ல dress வாங்கணும்...என் அக்காவுக்கும் மாமாவுக்கு கூட நான் வாங்கணும் .வேலையில் சேர்ந்த வுடன் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைத்தேன் mobile க்கு செலவு செய்து விட்டு அம்மாவுக்கு பணம் அனுப்ப சரியாக இருந்தது...இந்த மாதம் அக்காவுக்கு செலவு செய்ய நினைக்கிறேன் , அவ கிட்ட கேட்ட வேணாம் என்று தான் சொல்வாள்..அதான் நானா வாங்கலாம்னு யோசிச்சிடிருகேன்... நீங்க எதாவது நல்ல shop சொல்லுங்களேன் " என்றாள்
சேகர் ,"இங்க T.Nagar ரெங்கநாதன் தெரு தான் பிரபலம் .....நீங்க அங்க போனா எல்லோருக்கும் துணிமணி வாங்கலாம் .நம்ம நினைச்ச காசுல வாங்கலாம் . நம்ம எடத்துல இருந்து நீங்க எலெக்ட்ரிக் train ல போகலாம் ,
கொஞ்சம் கூட்டமாக இருக்கும் நீங்க கவனமா போகணும் ....." என்றான்.
ஸ்வேதா ,"சரி இந்த வாரமே போகலாம்,எனக்கு அந்த எடம் புதுசு ,நீங்க என் கூட வந்தாநல்லா இருக்கும் " என்று கேட்க அவனும் சரி என்றான்.
சனிகிழமை இருவரும் பல கடைகள் ஏறி ,ஸ்வேதா நினைச்ச படி எல்லா dress உம் வாங்கினாள்.ஷாப்பிங் முடித்து இருவரும் களைப்பை ஒரு ஜூஸ் கடையில் நின்றார்கள் ...அப்போது சேகரிடம் ," நீங்க வந்ததால தான் என்னால இங்க லாம் வர முடிந்தது ....அக்கா மாமா இருவரும் வேலை வேலை ன்னு ரொம்ப பிஸி ,ஷாப்பிங் ன்னு என்ன அவுங்க கூட்டி போனதே இல்ல ...வேலை விட்டு வரும் போதே எல்லாத்தையும் வாங்கி வருவாங்க , உங்க மூலமா தான் எனக்கு சென்னை தெரியுது ,ரொம்ப தேங்க்ஸ் " என்று ஸ்வேதா முடித்தாள். ஒரு புன்முறுவலுடன் ஓகே என்றான் சேகர்...
ஸ்வேதா நேராக பஸ் பிடித்து வீடு சென்றாள்.