11 February 2010

அன்புள்ள அண்ணி 7

மறு நாள் காலை எப்போதும் போல ஆபீஸ் சென்றாள் ப்ரீதா......மீனா அங்கு ஏற்கனவே வந்திருந்தாள்.ப்ரீதாவிடம் வொர்க் பற்றிய சந்தேகங்களை கேட்டு கொண்டிருந்தாள்.அப்போது ப்ரீதா ," மீனா நேத்து உன் நண்பர்னு ஒருத்தர அழைதிருந்தியே அவர் யாரு ? நேத்தே இத பத்தி உன்கிட்ட கேட்கனும்னு இருந்தேன் ......நம்ம காலேஜ் ,உன்னுடைய கிளாஸ்நீ அவனை பத்தி என்கிட்டே இதுவரை சொன்னதே இல்லையே?" என்று கேட்டாள் ......

"ஆமா ப்ரீதா ,சத்யா வ பத்தி உன்கிட்ட சொன்னது கிடையாது ....எங்க batch இல் நாங்க ரெண்டு பெரும் தான் ஸ்காலர்ஷிப் பணத்தின் மூலம் படித்தோம் ...அதன் மூலம் தான் ,நல்ல நண்பர்கள் ஆனோம்....யாரிடமும் அவன் பேச மாட்டான்.தானுண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பான் ....அவனுடைய விடாமுயற்சி ,தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும்.அவன பத்தி உன்னிடம் சொல்ல அவசியம் வரல,அதான் உன்கிட்ட சொல்லல...நம்ம கம்பனிக்கு அருகில் தான் அவன் வேலை பார்க்கும் கம்பெனியும் உள்ளது....அவன் ஞாபகம் வந்தது அதனால் தான் அவனை அழைத்தேன் "என்றாள் மீனா .

நேரம் செல்ல செல்ல ப்ரீதாவும் மீனாவும் தங்கள் வேலையில் மூழ்கினார்கள். அன்று மாலை வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்த ப்ரீதாவுக்கு கைபேசியில் அழைப்பு வர ....பேசினாள்.மறுமுனையில் ,"ஹலோ நான் சத்யா பேசுறேன் .....எப்படி இருக்கீங்க ப்ரீதா ...மீனாகிட்ட தான் உங்க நம்பர் வாங்கினேன்...உங்க கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும் .......நாம ஏற்கனவே மீட் பண்ண restaurant க்கு நாளைக்கு மாலை ஆறு மணிக்கு வந்திடுங்க....." ப்ரீதா ,"ஹலோ சத்யா.......அது வந்து.......நேத்து தான் நாம மீட் பண்ணோம்....எனக்கு உங்கள யாருன்னே தெரியாது ....நான் எதுக்கு வரணும் ...பேசணும் ....சாரி நான் வர மாட்டேன் " என்று சொல்ல ,அவளை பேச விடாமல் சத்யா ,"நீங்க நாளைக்கு வரீங்க ப்ரீதா ,உங்களுக்காக நான் சரியா ஆறு மணிக்கு காத்திட்டு இருப்பேன் வச்சிடறேன்" என்று அழைப்பை துண்டித்தான்.

ப்ரீதாவுக்கு கோபம் எழுந்தது ...."இந்த மீனா ஏன் கண்டவுங்க கிட்ட என் நம்பரை கொடுக்குறா ?இப்போ அவன் பேசணும் வரணும்னு சொல்றான்....இது என்ன புது தொல்லை " என்று தனக்குள்ளே பேசி கொண்டு மீனாவை தேடினாள் ஆனால் அவள் அதற்குள் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.சரி நாமும் வீட்டிற்கு சென்று அவளை போன் செய்து கேட்போம் என்று ப்ரீதாவும் வீட்டிற்கு கிளம்பினாள்.