மாணிக்கம் மாலா தம்பதியரின் ஒரே மகள் ப்ரீதா .இன்ஜினியரிங் படித்து முடித்த பட்டதாரி .மாணிக்கம் ஒரு பெரிய வங்கியில் மேனேஜர் ஆக இருக்கிறார் .மாலா இல்லத்தரசி.இவர்களுக்கு சொந்தமாக சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளன .ஒரு வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர்.இன்னொரு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்கள்.ஒரே பெண் என்பதால் ,மிகவும் செல்லம் ப்ரீதாவுக்கு.அவள் என்ன ஆசைபட்டாலும் வாங்கி தரும் தந்தை,அவளை பார்த்து பார்த்து கவனிக்கும் தாய் என்று வசதியாகவே வளர்ந்தாள்.என்ன தான் அவள் வசதியாக வளர்ந்தாலும் ,பிறருக்கு தன்னாலான உதவி செய்வது , எல்லோரிடமும் அன்பாக பழகுவது என்று நல்ல குணங்களும் ப்ரீதாவுக்கு உண்டு.படிப்பிலும் அவள் கெட்டிகாரி தான்.
தெய்வ பக்தி மிகுந்தவள் ....நாம் சந்தோசமாக இருப்பதற்கு இறைவனின் அருள் தேவை என்று நம்புபவள்.உடல் நலனில் மிகுந்த அக்கறை உண்டு ப்ரீதாவுக்கு ....தினமும் இரண்டு மணி நேரமாவது ஜிம்க்கு சென்று விடுவாள் .அதனாலே என்றும் ப்ரீதா புத்துணர்ச்சியுடன் காணபடுவாள்.ப்ரீதா முகத்தில் என்றும் ஒரு புன்சிரிப்பு இருக்கும் ,அவள் அழகிற்கு மேலும் அது மெருகு சேர்க்கும் . நல்ல கலர் ,நல்ல உயரம் ,நல்ல அழகு ....ஒரு பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ப்ரீதாவையே சொல்லலாம்.பணம்,அழகு என்று எல்லாம் இருந்தாலும் ,தலைகனம் இல்லாதவள் ப்ரீதா.
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து முடித்திருந்த ப்ரீதாவுக்கு வேலை சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது..மாணிக்கம் , மாலா வேண்டாம் என்றாலும் பல கம்பெனிகளுக்கு வேலைக்கு அப்ளை செய்து கொண்டிருந்தாள்.ப்ரீதாவுக்கு இன்னொரு ஆசையும் இருந்தது.அமெரிக்க சென்று MS படிக்க வேண்டும் என்பது தான் அது.பல ஆசைகள் பல கனவுகள் என்று மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது அவளது வாழ்க்கை .ப்ரீதாவின் தோழிகள்,நண்பர்களுக்கு கூட சில சமயம் இவள் மீது பொறாமை தான்.இப்படி பட்ட வாழ்க்கை நமக்கு என்று ஏற்படும் என்ற ஏக்கம் கூட அவர்களுக்கு உண்டு.
கவலை என்றால் என்ன ? அழுகை என்றால் என்ன ? கஷ்டம் என்றால் என்ன?என்று தெரியாமலே வளர்ந்தவள் ப்ரீதா......நம் கதையின் நாயகி ........
அவள் எங்கு சென்றாலும் அவளுக்கு வெற்றி தான்.அன்றும் அப்படி தான், ப்ரீதாவின் நெருங்கிய தோழி மீனா ,அவளை ஒரு பெரிய நிறுவனத்தின் நேர்முகத்தேர்வுக்கு அழைத்து சென்றாள்.ப்ரீதாவின் முதல் interview............
திடீரென்று மீனாவுடன் புறப்பட்டு வந்ததால் ,நன்றாக தன்னை தயார் செய்யவில்லை...இருந்தாலும் எப்படியாவது வேலை பெற்று வெற்றியுடன் வர வேண்டும் என்ற ஆசையில் இன்டர்வீயு நடக்கும் இடத்துக்குள் நுழைந்தாள்..
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago