அதுவரை அமைதியாக இருந்த பசங்க வாயை கைகளால் மூடி சிரிக்க ஆரம்பித்தார்கள் .ஸ்வேதாவுக்கு என்னவோ போல் ஆகி விட்டது.நன்றாக தானே பேசுகிறோம் இதற்கே இப்படி சிரிக்கிறார்கள் !!! என்று நினைத்தாள்.இதை பார்த்த கோபாலன் முகம் சுளித்தார் .ஒரு வழியாக கணிப்பொறியை நோக்கி திரும்பி..." I pressing start ...mouse clicking.....going to ms-office .....mouse clicking....opening document என்று சொன்னாள். இன்னும் சிரிப்பு பலமாக கேட்டது....ஸ்வேதாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்ல ...."சட் அப் யுவர் மௌத்ஸ் ....... டோன்ட் லாப்பிங் " என்று சற்று கடினமாகவே சொன்னாள் . இதை கவனித்து கொண்டிருந்த கோபாலன் மாணவர்களிடம் "Keep quiet and listen to her" என்றார்......எப்படியோ தட்டு தடுமாறி அரை மணிநேரத்தை ஓட்டினாள். பத்து மணி ஆனதும் "டுடே கிளாஸ் பினிஷ் ....டுமாரோ கிளாஸ் ஸ்டார்ட்" ..... என்றாள்.
அந்த அஞ்சு பசங்களும் இவளை கொஞ்சம் நக்கலாக பார்த்துவிட்டு "thank you mam" என்று சொல்லி விட்டு சென்றார்கள்.ஸ்வேதாவுக்கு ஒரு மலையை கடந்தது போல் இருந்தது....அங்கு கோபாலன் வந்து...."Swetha come to my room immediately" என்றார்.
ஸ்வேதா வுடனே சென்டர் ஹெட் ரூம்க்கு போனா. அப்போ கோபாலன் அவளை கண்ட படி திட்ட ஆரம்பித்தார் ..... " இந்த சென்டர்ல உங்கள இண்டர்வ்யு இல்லாம செலக்ட் பண்ணேன் ,அதற்கு முக்கிய காரணம் உங்க அக்கா தான்...அவுங்க சொன்னாங்க ன்னு தான் உங்கள நேர்ல கூட பார்காம திருச்சி ல இருந்து வர சொன்னேன் ....உங்க மார்க் ,படிப்பு எல்லாம் மனதில் வைத்து செலக்ட் பண்ணேன்...ஆனா என்னம்மா இங்கிலீஷ் எ இப்படி கொல்றீங்க..
இன்னும் கொஞ்சம் கிராம்மர் ஐ நல்லா படிச்சுருக்க கூடாதா" என்று தொடர்ந்தார் .......ஸ்வேதா வேர்க்க விருவிருக்க சிலை போல கோபாலனை பார்த்து கொண்டிருந்தா......
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago