இரவெல்லாம் தூங்காமல் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தன்னையே ரெடி பண்ணினாள். காலை, அவசரமாக எழுந்து கிளம்பி திரும்பவும் தனக்கு தெரிந்ததை சொல்லி பார்த்தாள். Exam க்கு போகும் மாணவனை போல் ஒரு வித நடுக்கத்துடனே சென்டர் நோக்கி சென்றாள்.
நேற்று போலவே இன்றும் சேகர் தான் வரவேற்றான் .அவன் அவளிடம் "நீங்க 8th std students க்கு எடுக்கனுங்க " என்று சொன்னான்.ஸ்வேதாவுக்கு கொஞ்சம் சந்தோசம்...."அப்பாடா நம்ம விட சின்ன பசங்க தானே" என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள் . 9 .30 மணிக்கு அஞ்சு பசங்க வந்தாங்க.அவளும் தனக்கு கொடுத்த ரூமில் அமர்ந்து கம்ப்யூட்டர் switch on செய்தாள்.
5 சிறுவர்களும் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல் தோற்றமளித்தார்கள்.
அவர்கள் அமைதியாக அமர்ந்தார்கள்.இப்போது ஸ்வேதாவுக்கு கொஞ்சம் தைரியமும் நம்பிக்கையும் சேர்ந்து இருந்தது. அப்போது சென்ட்டர் ஹெட் கோபாலன் வந்து..."Please introduce yourself to students and continue the class" என்று சொல்லி விட்டு ஸ்வேதா வின் அருகில் அமர்ந்தார்.இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்வேதாவுக்கு ஒரே பதட்டம்...
ஸ்வேதா, "முருகா இது என்ன சோதனை....இவருக்கு முன்னாள் நான் நன்றாக எடுக்கணும் நீ தான் காப்பத்தனும் " என்று முனுமுனுத்தாள் ... Ok start என்று ஹெட் சொல்ல... தட்டு தடுமாறி...My name is Swetha....My father name is Rajaram,My mother name is Sakunthala..I am studied in trichy..yesterday come in chennai.. I am stayed at sister's home.I will take class ms-office to you today.... என்று மடமடவென முடித்தால்..........
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
4 years ago
No comments:
Post a Comment