ப்ரீதா வீட்டிற்குள் வர, அவள் அம்மா மாலா ," வா ப்ரீதா ,களைப்பா இருப்ப ,நான் காபி போட்டு தரட்டுமா " என்று கேட்டாள்.அதை எதையும் காதில் வாங்காமல் ...நேராக தன் அறை சென்று மீனாவின் மொபைல் க்கு போன் செய்தாள்.ஆனால் மீனாவின் மொபைல் சுவிட்ச் ஆப் மோடில் இருந்தது.ப்ரீதாவின் டென்ஷன் அதிகம் ஆனது ....அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தாள்இதனை கண்ட மாலா ," என்ன அச்சு உனக்கு ,நான் இங்க பேசிட்டு இருக்கேன்...நீ என்னை கண்டுக்காம போற ...என்ன டென்ஷன் ,ஆபீஸ்ல எதாவது நடந்துச்சா ?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லமா ...என் தோழி மீனா உனக்கு தெரியும் ல அவளுக்கு தான் போன் ட்ரை பண்ணிட்டு இருந்தேன்....அவளபிடிக்க முடியல அதான் "......என்று சொன்னாள் ப்ரீதா.
ப்ரீதாவுக்கு ,சத்யா கூப்பிட்டதே நினைவில் நின்றது ...ஏன் அவன் என்னிடம் தனியா பேசணும் என்றான் ....என்ற கேள்வி தான் அவள் மனதிற்குள்.....
"நாம ஏன் அங்க போகணும்,சத்யா கூப்பிட்டா நாம போகனுமா....போக வேண்டாம்....என்ன நடக்குதுன்னு பார்போம் என்று ஒரு மனதும்
நாம நாளைக்கு போனா தான் என்ன ,அவன் என்ன சொல்றான்னு பார்போம் என்று மற்றொரு மனதும் மாறி மாறி துன்புறுத்தியது..... காலையில் சீக்கிரமே ஆபீஸ் சென்றாள்.
மீனா எப்படியும் இன்று ஆபீஸ் வருவாள்.அவளிடம் சென்று கேட்போம் ,என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமே ...அன்று மீனா வரவில்லை . ப்ரீதா ,மீனாவின் மொபைல் க்கு மீண்டும் டயல் செய்தாள் ....அதே சுவிட்ச் ஆப் இல் இருந்தது .வேலையில் சேர்ந்த இரண்டாவது நாளில் லீவ் எடுத்திருக்கிறாள்.,அதுவும் யாரிடமும் எதுவும் சொல்லாமல்....என்று மீனாவின் மேலே ப்ரீதாவுக்கு கோபம் மேலோங்கியது .அன்று முழுவதுமே அவளால் முழு மனதுடன் வேலையில் ஈடுபட முடியவில்லை.அவள் ஒரு முடிவுக்கு வந்தாள் . இன்று மாலை எப்படியும் சத்யாவை சந்தித்து விட வேண்டும் .....அவன் ஏதாவது தவறாக நடக்க முயற்சித்தால் , நாம் போலீசிடம் தெரிவிக்கலாம் ...தைரியமாக இருக்க வேண்டும் ...அவன் மீனாவின் நண்பன் அதனால் அவன் என்ன சொல்றான்னு கேட்போம் என்று முடிவு செய்தாள்.
தன் கை கடிகாரத்தையே பார்த்து கொண்டிருந்தாள் .மணி 5.30 ஆனதும் ....தன் கைபையை எடுத்து கொண்டு புறபட்டாள் .அன்று சென்ற அதே restaurant க்கு விரைந்தாள் .வெளியில் இருந்து பார்த்த போது சத்யா அவளுக்காக காத்திருப்பது தெரிந்தது.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago