மறுநாள் ஆபீஸ் சென்ற ப்ரீதாவுக்கு ,அவளது டீமில் உள்ள ஒரு ஓபனிங் தெரிய வர தன்னுடைய நெருங்கிய தோழி மீனாவுக்கு தெரிய படுத்தினாள்.
ப்ரீதா இந்த அலுவலகத்தில் பல நாள் பணியாற்றினாலும் நெருங்கிய நண்பர் என்று எவரும் இல்லை.ப்ரீதாவும் அவளுண்டு அவள் வேலையுண்டு என்று தான் இருப்பாள்.எப்படி யாவது மீனாவை தன்னுடைய கம்பெனயில் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆசை இப்போது மேலோங்கி இருந்தது ப்ரீதாவுக்கு .மீனாவுக்கு மறு நாள் இண்டர்வியு க்கு ஏற்பாடு செய்தாள்.
வீட்டிற்கு சென்ற ப்ரீதாவிடம் பேசுவதற்கு அம்மாவும் அப்பாவும் காத்து இருந்தார்கள். ப்ரீதா சளிப்புடன் ," இன்னைக்கும் யாராவது என்னை பெண் பார்க்க வருகிறார்களா ?,நான் ரெடியாக வேண்டுமா ?"என்று கேட்டாள்.மாணிக்கம் ,"இல்லம்மா நாங்க உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தோம் ,ஆனா வருவர்களிடம் அது இல்லை ,இது குறை என்று நீ சொல்லுகிறாய் ...உனக்கு யாரையாவது ........உன்னுடைய கம்பெனயில் வேலை பார்கிறவரை பிடித்திருந்தால் சொல்லு ....நானும் அம்மாவும் அவுங்க வீட்டில் போய் பேசுறோம் ...உன்னுடைய ஆசை தான் எங்களுடைய ஆசை....எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு " என்றார். ப்ரீதா ,"என்னப்பா அப்படி இருந்தா உங்க கிட்ட தான் முதல்ல சொல்லி இருப்பேன்.....அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை....எனக்கு அவர்களை பிடிக்கவில்லை அதுதான்....நீங்க வேற நல்ல மாபிள்ளைய பாருங்கப்பா.....இத பத்தி கவலை பட்டு மனச குழப்பிக்காதிங்க பா " என்று தன் அறையை நோக்கி விரைந்தாள் .
தனக்கு நல்ல வாழ்க்கை துணைவரை, தான் வணங்கும் தெய்வம் தான் கூடிய சீக்கிரம் காண்பிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விட்டு படுத்தாள். மறு நாள் காலை , மீனாவுக்கு போன் பேசினாள்...நன்றாக இண்டர்வியு க்கு ப்ரிபேர் செய்து வருமாறு தெரிவித்தாள் . ஆபீஸ் சென்ற ப்ரீதா, தன் தோழி மீனாவை தேடினாள்.மீனா ,இரெண்டாவது கட்ட இண்டர்வியு சென்றிருந்தாள்.
ப்ரீதாவும் தன் கேபினுக்கு சென்று தன் வொர்க்கை தொடர்ந்தாள்.ப்ரீதாவின் ப்ராஜெக்ட் மேனேஜர் அருணிடம் இருந்து அழைப்பு வர சென்ற அவளிடம் , "ஹாய் ப்ரீதா ,மீனா செலக்ட் ஆகிட்டாங்க ...உங்க டீம் ல தான் அவர்கள அப்போயன்ட் பண்ணி இருக்கோம்.....நீங்க தான் இவர்களுக்கு ட்ரைனிங் கொடுக்கணும் ......உங்க ரேபிர்றல் ன்னு நினைக்கிறேன் .....சந்தோசம் தானே ....இன்றே அவர்களை ஜோஇன் பண்ண சொல்லிட்டேன் !!"என்று சொல்ல ப்ரீதாவுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி.மீனாவை கூட்டி சென்று அவள் டீமில் உள்ள அனைவரையும் அறிமுக படுத்தினாள் . நீண்ட நாள் விலகி இருந்த நட்பு.....மீண்டும் ஒன்று சேர்ந்ததில் இருவருக்கும் ஆனந்தம் .
மீனாவிடம் ,"எப்படியோ என்னுடைய டீம்ல வந்து சேந்துட்ட .....எப்போ எனக்கு treat கொடுக்க போற ....நானும் உன்கிட்ட நிறைய பேசணும் " என்று சொல்ல ..."இன்னைக்கு evening வச்சிக்குவோம்.. என்றாள். மாலை ஆனது இருவரும் அவர்கள் கம்பெனி அருகில் இருந்த restaurant க்கு சென்றார்கள்.....
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago
No comments:
Post a Comment