10 February 2010

அன்புள்ள அண்ணி 6

அவர்கள் இருவரும் அமர, மீனா யாரையோ எதிர் பார்த்து கொண்டிருந்தாள் ??
இதை கவனித்த ப்ரீதா அவளிடம் ,"என்ன மீனா ஏன் அங்க பார்த்துட்டு இருக்கிற ...வேற யாராவது வர்றாங்களா? நாம ரெண்டு பேர் மட்டும் தான்னு நெனச்சுட்டு இருந்தேன் ......" என்றாள் .மீனா ,"ஆமா ப்ரீதா நான் முக்கியமான ஒருத்தர எதிர்பார்த்துட்டு இருக்கேன் .....என்னுடைய நலன் விரும்பி ,நல்ல நண்பன் என்று கூட வச்சுக்கோயேன் " என்றாள்.

மீனாவுக்கு இன்று மதியம் தான் வேலை கிடைத்தது ....restaurant போலாம் என்று அரை மணி நேரத்திற்கு முன்னர் தான் ப்ரீதா முடிவு செய்தாள்அதற்குள் இந்த மீனா யாரை இந்த ஹோட்டலுக்கு அழைத்தார்? என்று குழப்பத்துடன் இருந்தாள் ப்ரீதா. ப்ரீதாவுக்கு கோபம் வந்தது....." என்னடி யார் வர்றாங்க ...இப்ப சொல்லு நாம வந்து பத்து நிமிஷம் ஆச்சு.....நானும் சீக்கிரம் வீட்டிற்கு போகணும் ..அப்படி யாருக்கு தான் காத்துட்டு இருக்க ....நாம ஆர்டர் பண்ணிடலாம் உன் நண்பர் வந்தா ஜாயின் பண்ணிக்கட்டும் " என்றாள்.

அதோ வந்துவிட்டார் சத்யா ,"என்று மீனா கைகாட்ட ....ப்ரீதாவும் மெல்ல திரும்பினாள் . "வாங்க சத்யா உட்காருங்க ., இவள உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் ...ப்ரீதா ..உங்களுக்காக தான் காத்து கிட்டு இருந்தோம் " என்றாள் மீனா ....ப்ரீதாவுக்கு ஒரே குழப்பம் ,இவனை எங்கோ பார்த்தது மாதிரி இருக்கிறதே என்று யோசிக்க ஆரம்பித்தாள். "ஹாய் ப்ரீதா ....நான் சத்ய பிரகாஷ் ..என்ன எல்லோரும் சத்யானு கூப்பிடுவாங்க ...நான் மீனாவோட காலேஜ் மேட் ...மீனா உங்கள பத்தி நிறைய சொல்லுவா ...நானும் உங்கள கல்லூரில பார்பேன் .....ஆனா என்ன department வேற.......என்ன ரெண்டு பேரும் மன்னுச்சிடனும் சாரி நான் லேட்டா வந்துட்டேன் " என்றான் .

ப்ரீதா கோபம் சற்று குறைய ஆரம்பித்தது.மூவரும் நன்றாக சாபிட்டார்கள்.
சத்யா ப்ரீதாவையே பல முறை உற்று பார்த்ததை ப்ரீதா கவனித்து கொண்டு தான் இருந்தாள்.மீனா ,"என்னுடைய சந்தோசத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் ..நான் கூப்பிட்ட உடனே நீங்க வந்ததற்கு நன்றி என்றாள் "
சத்யா ,"என்ன மீனா ...இப்படி சொல்லிட்ட....உன்கிட்ட இருந்து நிறைய ட்ரீட் எ எதிர்பார்கிறேன் ...." என்றான் .ப்ரீதா ," சரி டி ....அம்மா தேடிட்டு இருப்பாங்க ...நான் கிளம்புறேன் ...சரி சத்யா நான் வர்ரேன் " என்று சொல்லி கிளம்பினாள்.
சத்யா மீனாவிடம் ,"எனக்கு ப்ரீதாவின் மொபைல் நம்பர் கொடு என்று கேட்டு வாங்கினான் .மீனா ,"இவன் எதற்கு அவள் நம்பர் வாங்குகிறான் என்று குழம்பினாள் ".......................................

No comments:

Post a Comment