கோபாலன் இன்னும் கடுமையாக தொடர ..ஸ்வேதா அமைதியாக இருந்தாள்.
கடைசியாக அவர் " நீங்க ஒரு மாதத்தில் உங்க communication skill ஐ develop செய்யுங்கள் ,உங்களுக்கு தெரிந்த இங்கிலீஷ் எ க்ராம்மரோடு பேச பழகுங்கள் , 1 Month தான் டைம் உங்களுக்கு இருக்கு ....நீங்க உங்களையே தயார் செஞ்சுகோங்க அதுவரைக்கும் சென்டர்ல மத்த வேலை ய பாருங்க " என்றார்.
ஸ்வேதா ஒன்றும் பேசாமல் ,மன பாரத்துடன் வந்தாள்.சேகரிடம் நடந்தவற்றை கூறினாள்.சேகர் அவளிடம் " கவலை படாதிங்க மேடம்...இது நடப்பது சகஜம் தான் ...உங்கள போல் தான் நானும் இருந்தேன் ....நீங்க டெய்லி இங்கிலீஷ் newspaper read பண்ணுங்க ,என்னுடனும் இங்கிலீஷ் ல பேசுங்க ... உடனே English இல் Expert ஆகிடலாம் " என்றார். ஸ்வேதாவுக்கு சேகர் சொன்னது ஆறுதலாக இருந்தது.அவள்,தன்னை பற்றி நினைத்து கேவலபட்டாள்.8th std படிக்கும் மாணவர்களுக்கு தெரிந்த கிராம்மர் கூட எனக்கு தெரியலை என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.
அவளை சொல்லி குற்றமில்லை ....அவள் படித்து வளர்ந்தது எல்லாம் திருச்சி யில் உள்ள சிறிய கிராமத்தில் .....கல்லூரி மட்டும் தான் திருச்சியில் படித்தாள்.குடும்ப வறுமையில் தான் சென்னை என்றாலும் பரவாயில்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தில் அக்கா தயவால் வந்தாள்.
தன்னை போல இன்னும் நிறைய தோழிகள் இவளை விடவும் மோசமாக இங்கிலீஷ் பேசும் நண்பர்களும் உள்ளனர் ....இவளாவது சென்னை வந்து வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது....ஆனால் மற்றவர்களுக்கு அதற்கு கூட வழி இல்லை.
ஸ்வேதாவுக்குஅங்கு இருக்கவே புடிக்கவில்லை....உடனே வீட்டுக்கு செல்ல வேண்டும் போல இருந்தது ...ஆனால் ஒரு மாதத்திற்கு தான் என்ன செய்ய வேண்டும் ....எப்படி தன்னை தயார் செய்ய வேண்டும் ...என்ற கவலையில் ஆழ்ந்தாள் .....
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago