ப்ரீதாவுக்கு தெரிந்த கேள்விகள் கேட்கப்பட ,சரியாக விடை அளித்தாள்.அன்றே அவளுக்கு Apponitment letter கிடைத்தது.அனால் அவளை அழைத்து சென்ற மீனாவுக்கு வேலை கிடைக்கவில்லை.ப்ரீதா நினைத்தது பலித்தது ....மிகவும் சந்தோஷ பட்டாள். வீட்டிற்கு போகும் வழியில் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி நன்றி சொன்னாள்.மாணிக்கம் மாலாவிடம் சொல்லி ஆனந்தபட்டாள்.ப்ரீதாவின் பெற்றோருக்கு அவள் வேலைக்கு செல்வதில் பெரிய மகிழ்ச்சியில்லை.....காசு பணம் அவர்களுக்கு முக்கிய தேவையில்லை....இருந்தும் ப்ரீதாவின் ஆசைக்கு இணங்கினார்கள்.
வேலையில் சேர்ந்த ப்ரீதா முழு திறமையோடும் , கடின உழைப்போடும் அவள் பணியில் இடுபட்டாள்.இதனால் சிறிது காலத்திலே பதவி உயர்வும் பெற்றாள். ப்ரீதா அதிர்ஷ்டசாலி , புத்திசாலி ,அழகி அதனால் தான் இவளால் இப்படி ஒரு நிலைமைக்கு வர முடிகிறது ...என்று பலரும் இவளின் முன்னேற்றம் கண்டு உள்ளுக்குள் குமுறினார்கள்.எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் .....தன் வேலையில் கவனம் செலுத்திவந்தாள்.இப்படியே ஆண்டுகள் உருண்டோடின....மாணிக்கமும் மாலதி உம் ப்ரீதாவுக்கு திருமணம் செய்ய எண்ணினார்கள்.
எனவே ஒரு நாள் ,ப்ரீதாவிடம் இது பற்றி பேச ஆரம்பித்தார்கள். மாணிக்கம் ,"ப்ரீதா உனக்கு வயசாகி கொண்டே போகிறது , நீயும் வேலைக்கு சென்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது ...உனக்கு திருமணம் செய்யலாம்னு நானும் அம்மாவும் நினைக்குறோம் ...உனக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை வேணும் ?? உனக்கு ஏதாவது கனவுகள் இருக்கா ? இதுவரை எல்லாம் உன் இஷ்டம் போல தான் நடந்தது ,இனியும் உன் ஆசை போல் தான் நடக்கும் ....நீ சொல்லு மா....நான் எனக்கு தெரிந்த ப்ரோகரிடம் சொல்லி வைக்கிறேன் " என்றார். " இன்னும் சில மாதங்கள் போகட்டும் பா ...நான் இன்னும் நல்ல நிலையில் வந்திடுவேன் .......இப்போ என் திருமணத்திற்கு என்ன அவசரம்? நான் உங்க கூட இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?"என்று ப்ரீதா கேட்டாள்.
"நீ என்ன இப்படி சொல்லிட்ட நீ எங்களோடு இருந்தால் தான் எங்களுக்கு சந்தோசம் ....நீ தான் எங்களுடைய ஒரே மகள்....உன்னுடைய திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆசை...இப்போது உனக்கு பார்க்க ஆரம்பித்தால் தான் சிலமாதங்களில் நல்ல வரன் கிடைக்கும் ....நீ வேலை பார்த்து கொண்டே இரு,நாங்கள் உனக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறோம் .....உனக்கு அந்த மாப்பிள்ளை பிடித்திருந்தால் தான் திருமணம் என்று மாலா சொன்னார்.இவ்வாறு ப்ரீதாவின் பெற்றோர் ஒருவாறு அவளை சமாதானம் செய்து ,அவளின் புகைப்படத்தையும் ,விவரங்களையும் பல ப்ரோகரிடம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago