பணம்,பதவி,அழகு,படிப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்த பெண்ணுக்கு கேட்கவா வேண்டும்...?? பலர் ப்ரீதாவை பெண் பார்க்க போட்டி போட்டு வந்தனர். மாணிக்கத்திற்கு ஜாதகம் ,ஜோசியம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நம் மகளை நன்றாக பார்த்துகொள்ளுபவன் தான் மருமகனாக வேண்டும் என்று நினைத்தார்.
அப்படி தான் ஒரு நாள்....ஒரு குடும்பம் ப்ரீதாவை பெண் பார்க்க வந்தது..மாப்பிள்ளை பிரபு சொந்தமாக பிசினஸ் செய்கிறார்.....நல்ல பணக்கார குடும்பம்....ஒரே மகன் தான்...ஆனால் பிரபுவின் பெற்றோர் ......பணத்திலேயே குறியாக இருந்தார்கள்....எவ்வளவு சொத்து இருக்கிறது?பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள் ??கார் எத்தனை உள்ளது ?வீடு கட்ட எவ்வளவு ஆனது ?என்று அவர்களின் கேள்விகள் இருந்தது ....ப்ரீதாவை பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லை...? கேட்கவும் விரும்பவில்லை...பிரபுவோ ஒன்றும் பேசாமல் ,அவன் பெற்றோர் சொல்வதற்கு ஆமாம் சாமி போட்டு கொண்டிருந்தான்...இதனை கண்ட ப்ரீதாவுக்கு ,அந்த குடும்பத்தின் மீதே வெறுப்பு வந்தது...
அவர்கள் சென்றவுடன் ,ப்ரீதா ,"அப்பா இந்த குடும்பத்தை கவனிசீங்களா ?அவர்களின் நோக்கம் பணத்திலே இருக்கிறது..........அவர்களே பெரும் பணக்காரர்கள் தான் இன்னும் பணத்தை நம்மிடம் இருந்து கரக்கவே ஆசை படுகிறார்கள்.....இப்படி பட்டவர்கள் முன்னே என்னை நிக்க வைக்காதீர்கள்" என்று ஆவேசமாக கூறினாள்.மாணிக்கமும் ,"ஆமாண்டா நான் கூட கவனிச்சேன் ,அவர்கள் வீட்டையும் ,காரையும்,சுத்தி வைத்துள்ள பொருட்களையும் ,நீ போட்டிருக்கும் நகைகளையும் தான் பார்த்து கொண்டிருந்தார்கள்.....அவர்களே வலிய வந்தாலும் ...நான் உன்னை அந்த பிரபுவுக்கு கட்டி தர மாட்டேன் " என்றார்.
ப்ரீதா,"இனி அடுத்து நல்ல இடமா பாருங்கப்பா " என்று சொல்லிவிட்டு ஆபீஸ் சென்றாள்.ஆபீஸ் சென்ற அவள் ,தன் தோழி மீனாவிடம் பேசலாம் என்று அவளை கைபேசியின் மூலம் அழைத்தாள் ."ஹலோ மீனா எப்படி இருக்கிற? உன் வேலை எப்படி போயிட்டு இருக்கு ?" என்று கேட்க ...மீனா ,"இப்போ naan வேலையில் இருக்கிற கம்பெனி சின்னது தான் ...வேலை வேலைன்னு என்னை கசக்கி புழியறாங்க ...எனக்கு இந்த கம்பெனி புடிக்கவேஇல்ல இருந்தாலும் இன்னும் பல கம்பனிக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் ....உங்க கம்பனில்ல ஏதாவது வேகன்சி இருந்தா சொல்லு ப்ரீதா ?மீனா நீ நல்ல பொசிசன்ல இருக்கன்னு தான் நான் நெனைச்சுட்டு இருந்தேன்.....உன்னோட லேட்டஸ்ட் ரேசுமை எனக்கு மெயில் ல அனுப்பு.....உனக்கு ஏற்ற ஜாப் இருக்கான்னு பார்கிறேன் "..என்றாள். மீனாவும் அவ்வாறே செய்தாள்.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago
No comments:
Post a Comment