14 December 2009

தெளிவான முடிவு 6

ஸ்வேதா சென்டர் வந்து சேர்ந்தாள்.சேகர் வந்திருந்தானா ? என்று பார்த்தாள்.அவன் தன்னுடைய வேலையில் மும்பரமாய் இருந்தான் .அவள்,
சேகரிடம் ,"ஹாய் சேகர் , குட் மார்னிங் ,நீங்க எனக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்கீங்க .....அதற்காக உங்களுக்கு ஒரு கிப்ட் ,என் நன்றிய தெரிவிக்க ஒரு பரிசு....கட்டாயம் நீங்க வாங்கிக்கணும் வேண்டாம்னு சொல்லிடாதீங்க " இதனை எதிர் பார்க்காத சேகர் முதலில் சற்று தயங்கினான் , பின்பு பெற்று கொண்டான் . "தேங்க்ஸ்" என்ற பதில் மட்டும் வந்தது .
ஸ்வேதாவும் தன்னுடைய வேலையில் மூழ்கினாள்.வேலை முடித்து வீடு
வந்தவுடன் ...அவளுக்கு சேகர் பற்றி எண்ணம் தோன்றியது...."ஏன் அவர் ஒன்றும் சொல்லாமல் என் பரிசை வாங்கி கொண்டார் ....என்னை தப்பா நெனைசுட்டாரா"? என்று யோசித்து கொண்டிருந்தாள் ....நாட்கள் பல சென்றது ......ஸ்வேதாவும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் . அவளுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை தன் அம்மாவுக்கு அனுப்பி விடுவாள். அக்காவுடன் இருப்பதால் , அவளுக்கும் பணம் கொடுத்து விட்டு ,மீதம் இருப்பதாய் தனக்கு வைத்து கொண்டாள்.
சென்டர் வரும் எல்லோரிடமும் மொபைல் இருப்பதை பார்த்தாள்.தனக்கும் வாங்க வேண்டும் என்று ஆசை தோன்ற , அதை பற்றி சேகரிடம் கேட்டாள்.
சேகர்," எனக்கு ஒரு நல்ல மொபைல் வாங்கனும்னு ஆசையா இருக்கு ,நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் " என்றாள்.சேகர் அவளிடம் ,"நம்ம சென்டர் அருகில் நோக்கியா ஷோ ரூம் இருக்கு ,நீங்க afternoon வாங்க நாம்
போய் பார்க்கலாம் " என்றான். தனியே ஒரு ஆணுடன் கடைக்கு செல்வது என்பது ஸ்வேதாவுக்கு முதல் முறை .
அவர்கள் இருவரும் லஞ்ச் முடிந்தவுடன் ,அருகில் இருந்த கடைக்கு சென்றார்கள்..சேகர் , Rs.2000 க்கு ஒரு நல்ல நோக்கியா போனும் ,ப்ரீயாக சிம் கார்டும் வாங்கி கொடுத்தான் .. ஸ்வேதாவுக்கு சந்தோசம் ,அந்த மொபைல் கலரும் ,நம்பரும் அவளுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது ....சேகரிடம் "ரொம்ப தேங்க்ஸ் " என்றாள்..சேகர் அதற்கு "ஸ்வேதா போன தடவ மாதிரி இப்பவும் எனக்கு வாட்ச்,கிப்ட் ,பரிசு ன்னு என்ன அந்நியன் ஆக்கிடாதிங்க " என்று சிரித்த படியே சொன்னான் ...
ஸ்வேதா மொபைல் தன் கையில் வந்தவுடன் உலகமே தன் கையில் இருப்பது போல் உணர்ந்தாள்.operate பண்ண தெரியாமல் விழித்தாள்...சேகர் தான் ,தன் செல் நம்பரை போட்டு அவளுக்கு கற்று கொடுத்தான் ... உடனே தன் அம்மாவுக்கு call பண்ணி பேசினாள்.

1 comment:

  1. apparam ? waiting for ur next post!!
    Eppadi eppadi? super kadai!

    ReplyDelete