01 January 2010

தெளிவான முடிவு 9

ஸ்வேதாவுக்கு கோபம் வந்தது ,"என்னக்கா இப்போ வந்து இப்படி சொல்ற ,எப்போதும் பெண் பார்க்க வீட்டிற்கு தானே வருவாங்க .! ஏன் நான் வேலை பார்க்கிற இடத்தை எல்லாம் சொல்றீங்க ,இது சென்ட்டர்ஹெட் க்கு தெரிந்ததுன்னா அவ்ளோ தான் ...என்ன புடிச்சு திட்ட ஆரம்பிச்சிடுவாரு....நீயே சொல்லு இது நல்லா இருக்கா ?நான் எங்க போய் டிரஸ் பண்ணுவேன் ,எனக்கு கிளாஸ் வேற இருக்கு 2.30 க்கு தான் முடியும்....அரை மணி நேரத்துல அவுங்க வந்திடுவாங்க ..நான் என்ன செய்ய போறேனோ தெரியல ....சரி இது அம்மாக்கு தெரியுமா? " என்று படபடத்தாள் .
சுதா பொறுமையாக , "ஏன் இப்போ tension ஆகிற நான் கோபாலன் ட்ட பேசுறேன் ..மாபிள்ள ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கு அதான் எந்த formality உம் இல்லாம உன்ன இங்கயே பாக்க வராரு ...நீயும் பாரு பிடித்தால் மேற்கொண்டு பேசலாம் இல்லன்னா வேணாம்னு சொல்லிடலாம் மாமா உனக்கு நல்ல வரன் தான் பார்பாரு...நானும் அரைநாள் permission போட்டு தான் வந்திருக்கிறேன் ,பாப்பாவை கூட daycare ல விட்டேன் ...இங்கேயே wait பண்றேன் ...நீ போய் கிளாஸ் முடிச்சுட்டு சீக்கிரம் வா எதையும் நினைத்து மனச குழப்பிக்காத " என்றாள்.
ஸ்வேதாவும் வேகமாக சென்று தன் வேலையை முடித்து, சுதாவிடம் வந்தாள்...சுதாவும் தனக்கு தெரிந்த make up போட்டு ஸ்வேதாவை தயார் படுத்தினாள். ஸ்வேதாவுக்கு ஒரே வருத்தம் , தன்னை முதன் முதலாக பெண் பார்க்க வரும் போது,தான் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தாள்..ஆனால் அது போல் எதுவும் நடக்கவில்லை .....
அவளுக்கு பல சந்தேகங்கள் எழுந்தது .....ஏன் அவசரமாக இன்றே பார்க்க வேண்டும்....இங்க தான மாப்பிள்ளை இருக்கார் ...லீவ் நாளா பார்க்க வரலாம்,
அப்படி என்ன அவசரம் அதுவும் நான் வேலை பார்க்கும் இடத்தில பார்கனுமா ?
ஏன் ஏன் ? என்று பல கேள்விகள்....
சுதா கோபாலனிடம் பேசி விட்டு வந்தாள்.ஸ்வேதா ,"அக்கா சார் என்ன சொன்னாரு "என்று கேட்க ,சுதா ," கோபாலன் என்னோட நல்ல நண்பர் ,நான் சொல்லி தான் உனக்கு வேலை போட்டு தந்தார் ...நான் எல்லாத்தையும் எடுத்து சொன்னேன் ,அவரும் புரிந்து கொண்டார் ...அவரோட ரூம்லயே உன்னோட பெண் பார்க்கும் படலம் ...நீ கொடுத்து வச்சவடி" என்று நகைத்தாள் .3.00 மணியும் ஆனது சுதாவும்,ஸ்வேதாவும் சுவர் கடிகாரத்தையே பார்த்து கொண்டிருந்தார்கள் ......

No comments:

Post a Comment