30 December 2009

தெளிவான முடிவு 8

ஸ்வேதா தான் வாங்கிய அனைத்தையும் அக்கா சுதாவுக்கு காண்பித்தாள்.சுதாவுக்கு ஒரே ஆச்சரியம் ..."நீ நம்ம ஊர்ல வீட்ட விட்டு வெளிய வர மாட்ட ஆனா ,இன்னைக்கு எங்க எல்லோருக்கும் துணி வாங்கி வந்திருக்க ..ரொம்ப சந்தோசமா இருக்கு ,சென்னை உன்ன நல்ல துணிச்சலான பொண்ணா மாத்திருச்சு"
என்று ஸ்வேதாவை புகழ்ந்தாள்.ஸ்வேதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
மறுநாள் காலை ஸ்வேதா சென்டருக்கு சீக்கிரமே கிளம்பினாள்.ஏனென்றால் அவளுக்கு first batch க்கு க்ளாஸ் எடுக்க வேண்டி இருந்தது...மதியம் 1 மணி இருக்கும், சுதா reception இல் காத்திருபதாக சேகர் வந்து சொன்னதும் ,ஸ்வேதாவுக்கு தூக்கி வாரி போட்டது ...."ஏன் சுதா இங்கு வந்தாள்? நான் வேலையில் சேரும் போது கூட வரவில்லை ? இன்று காலையில் வீட்டில் கூட எதுவும் சொல்லவில்லை...எதற்கு என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் ,அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவதா ? என்று பலவாறு நினைத்து கொண்டே சுதாவை நெருங்கினாள்.
சுதா,ஸ்வேதாவை பார்த்ததும் புன்னகைத்தாள். சுதா," என்ன ஸ்வேதா என்ன
பார்த்ததும் பயந்திட்டியா? எல்லாம் நல்ல விஷயம் தான் ...முக்கியமானதும் கூட
அதுக்கு தான் நான் நேர்ல வந்தேன் .....உனக்கு call கூட பண்ணல .....Sorry " என்றாள்.ஸ்வேதா,"சரி க்கா வந்துட்ட என்ன முக்கியமான விஷயம் ,எனக்கு அடுத்து க்ளாஸ் இருக்கு ....சொல்லு சீக்கிரம் "என்று பறந்தாள்.சுதா,"உன்னோட மாமா உன்ன பத்தி அவருடைய நண்பர்ட்ட சொல்லி இருந்தாரு..அவருக்கு தெரிந்த நண்பருக்கு வரன் பார்கிராங்கலாம் ...மாபிள்ள இங்க தான் உங்க சென்டர்க்கு பக்கத்துல இருக்கிற software company ல தான் வேலை பார்கிறாராம் ...
3 மணிக்கு உன்னை இங்க வந்து பார்க்கலாம் என்று உள்ளார் " என்று முடித்தாள் .
ஸ்வேதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

No comments:

Post a Comment