ஸ்வேதா இது கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் . சேகர் ஸ்வேதாவின் முகத்தை பார்க்காமல் , தலை குனிந்து அவன் மனதில் உள்ளதை கொட்ட ஆரம்பித்தான் ." ஸ்வேதா நீ சென்டர் க்கு வந்து சேர்ந்த புதிதில் என்னிடம் உன்னை பற்றி சொல்லும் போது உன் வெகுளித்தனம் எனக்கு பிடித்தது . ஆங்கிலம் சரியாக பேச கற்று கொள்ள வேண்டும் என்று என் உதவியை நாடி வந்த போது உன் தைரியம் எனக்கு பிடித்தது ,முப்பதே நாட்களில் ஆங்கிலத்தை சரளமாக பேசி எல்லோரையும் அசத்திய போது உன் திறமை எனக்கு பிடித்தது,நீ எனக்கு வாட்ச் பரிசாக தந்த போது உன் அன்பு எனக்கு பிடித்தது , உன் குடும்ப விசயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்ட போது உன் நட்பு எனக்கு பிடித்தது.நீ எனக்கு ஒரு நல்ல தோழி என்று நினைத்திருந்தேன்.
ஆனால், என்று உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் என்று கேள்விபட்டேனோ அன்று என் மனதில் சஞ்சலம் ஏற்பட ஆரம்பித்தது . அந்த இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை .உன்னை மற்றொருவருடன் திருமண கோலத்தில் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை .அப்போது தான் நீ எனக்கு நல்ல தோழி மட்டும் அல்ல ,என்னுடைய வாழ்கை துணைவியும் நீ தான் என்று உணர்ந்தேன்.
என்னுடைய உணர்வுகளுக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று நினைப்பில் தான் உன்கிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டேன் , உன்னுடைய பதில் என்னுடைய வாழ்வுக்கு தெளிவான முடிவாக இருக்கும் ." என்று சேகர் சொல்லி முடித்து நிமிர்ந்து ஸ்வேதாவை பார்த்தபோது ,அவள் கலங்கிய கண்களுடன் வாடிய முகத்துடன் ஒன்றும் பேசாமல் வேகமாக சென்று விட்டாள்.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago
No comments:
Post a Comment