27 January 2010

தெளிவான முடிவு 30

சேகர் சொன்னதற்கு எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்தாள்.அவளுக்கு எந்த கிளாசும் இல்லாததால் தன் அறையில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள் .இதற்கு மேலும் நம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தாமதிக்க கூடாது என்று நினைத்தாள். நல்ல தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றால் ,ஒப்பிட்டு பார்ப்பது தவறில்லை என்று தோன்றியது,ஸ்வேதாவுக்கு ......இருவரிடமும் நெருக்கமாக பழக நேரா விட்டாலும் ,பழகிய தருணங்களில் இருந்து பதில் தேட முயற்சித்தாள்.

சுனில் மற்றும் சேகர் இருவருமே பழகுவதில் நல்லவர்கள். சேகர் அவனுக்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே சகஜமாக பேசுவான். சென்டரில் கூட எல்லோரிடமும் அவன் பேசுவதில்லை ,தேவை என்றால் பேசுவது அவனின் இயல்பு. அதே போல்,அந்த interview selection இல் சொன்ன விதம் ஸ்வேதாவை யோசிக்க வைத்தது ,தன்னை விட அதிகம் தெரிந்தவரை சேகருக்கு பிடிக்காது ,அதனால் தான் அவன் ரகுவை செலக்ட் செய்தான்.
ஆனால் சுனில் தெரிந்தவர் தெரியாதவர் , யாரிடமும் சகஜமாக பேசி பழகி விடுவான்.அம்மாவை ஹாஸ்பிடலில் வந்து பார்த்து பழகிய விதமும் , அக்கா மாமாவிடம் அணுகிய முறையும் முன் தினம் தான் அறிமுகமே என்றாலும்,தன் வீட்டு விசேஷத்திற்கு அழைத்த விதமும் ஸ்வேதாவுக்கு பிடித்திருந்தது......

சுனிலின் குடும்பம் சின்ன குடும்பம் ,ஒரே பையன் .அதனால் அவ்வளவு பொறுப்புகள் இல்லை.தானுண்டு குடும்பமுண்டு என்று இருக்கலாம் .
ஆனால் சேகரின் குடும்பமோ சற்று பெரியது,இரண்டு தம்பிகள் ...இருவரும் சேகரை நம்பி இருக்கிறார்கள் . பொறுப்புகள் அதிகம் . எனவே சுனிலின் குடும்பம் தான் தனக்கு சிறந்தது என்று ஸ்வேதா எண்ணினாள் .

சுனில் ,ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல உத்தியோகத்தில் உள்ளார்.கை நிறைய சம்பளம் .ஆனால் சேகரோ ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இல் faculty , சம்பளம் ஒன்றும் பெரிதாக இல்லை . சேகரை விட சுனில் தான் மிகவும் அழகு. இந்த வகையிலும் ஸ்வேதாவுக்கு சுனிலை தான் பிடித்தது.

இவ்வாறு பல வகையிலும் சுனில் தான் ,தனக்கு பொருத்தமானவன் என்று நினைத்தாள் .குணம் ,பணம் ,அந்தஸ்து ,குடும்பம் ,அழகு என்று அனைத்திலும் நம் வாழ்க்கைக்கு நல்ல துணை சுனில் தான் என்று தெளிவான முடிவை எடுத்தாள். தன் முடிவு சுயநலமோ என்று கூட எண்ணினாள் .சுயநலம் தான் , ஏனென்றால் இது அவளின் வாழ்க்கை .

பின்குறிப்பு: ஸ்வேதாவின் முடிவு தெரிந்த பின்னர் ,சேகர் வேலை விட்டு செல்வது என்று முடிவெடுத்தான். அதே சென்டரில் வேலை பார்த்தால் ,ஸ்வேதாவை பார்க்க நேரிடும் ,மனது சஞ்சலப்படும் என்று நினைத்த அவன் வேறு இடத்தில் வேலைக்கு முயற்சித்தான் .இது தான் அவனுக்கு தெளிவான முடிவாக பட்டது.
ஸ்வேதாவுக்கும் சுனிலுக்கும் இனிதே திருமணம் நடந்தது.
__________________முற்றும் _________________

1 comment:

  1. Good ending!
    Very practical story..you have narrated well anitha!
    waiting for your next one ..

    ReplyDelete