17 January 2010

தெளிவான முடிவு 22

ஸ்வேதா சென்ட்டர் சென்றாள்.அவள் எதிர்பார்த்தது போல சேகரும் ஏற்கனவே வந்திருந்தான்.ஸ்வேதா சேகரை பார்க்கும் போது ,தலை குனிந்து ஒன்றும் பேசாமல் சென்றான் ,ஸ்வேதா ,"சேகர் நான் உங்க கிட்ட நேத்து நடந்தது பத்தி பேசணும் ,கொஞ்சம் இங்க வந்து உட்காருங்க " என்று சொல்ல சேகரும் அங்கு அமர்ந்தான். ஸ்வேதா ," சேகர் உங்கள நான் நல்ல நண்பரா நினைத்து தான் பழகினேன் ....நேத்து நீங்க பேசியது என்னை யோசிக்க வைத்தது ஆனால் இப்பொழுது என்னால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை , இது என்னோட வாழ்க்கை சம்மந்த பட்ட விஷயம் என்பதால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ,நீங்க என் நிலைமையை புரிஞ்சிகுவீங்கன்னு நினைக்கிறேன் " என்று ஸ்வேதா சொன்னாள்.

சேகர் ,"ஸ்வேதா நேத்து லீவ் போட்டு போன போதே நெனச்சேன் , நீங்க என்கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்த்திருக்க மாடீங்கன்னு , ஆனாலும் என்னால உங்க கிட்ட சொல்லாம இருக்க முடியல.உங்கமுடிவு எதுவா இருந்தாலும் எனக்கு சம்மதம் ,நீங்க என்ன தப்பா நினைக்காம இவ்வளவு தூரம் பேசினதே எனக்கு ஆறுதலா இருக்கு "என்று சொன்னான் .

அப்போது ஸ்வேதாவின் செல் போன் ஒலிக்க ,அக்கா சுதாவிடம் இருந்து வந்தது அந்த call ."என்னக்கா அம்மா வந்துட்டாங்களா "?என்று ஸ்வேதா கேட்டாள். அதற்கு சுதா, நீ சீக்கிரம் மீனாக்ஷி மருத்துவமனைக்கு வா " என்றாள்.ஸ்வேதா பதட்டத்துடன் ,"என்னாச்சு அக்கா .. என்னாச்சு நான் உடனே வர்ரேன் " என்று சொல்ல சுதா ,"நம் அம்மா ரயிலில் இருந்து இறங்கும் போது கீழே விழுந்து விட்டார் நல்ல வேலை மாமா அழைக்க சென்றதால் உடனே அம்மாவை ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறார்.

No comments:

Post a Comment